Village Business Ideas In Tamil -நீங்கள் புதிதாக தொழில் தொடங்க விரும்புகிறீர்களா? அதுவும் நீங்கள் வசிக்கும் கிராமப்புறத்தில் தொழில் தொடங்க விரும்புகிறீர்களா? பலர் கிராமங்களில் தொழில் தொடங்குவதற்கு உரிய உள்கட்டமைப்பு இல்லை என்று நினைக்கலாம். ஆனால், உண்மையில், கிராமப்புறங்களில் அதிகப்படியான வணிக வாய்ப்புகள் இருக்கின்றன. 2025-ஆம் ஆண்டில், இந்தியாவின் கிராமப்புற மற்றும் செமி-அர்பன் பகுதிகளில் ஃபாஸ்ட் மூவிங் கன்ஸ்யூமர் குட்ஸ் (FMCG) மார்க்கெட்டானது 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீங்கள் கிராமப்புறங்களில் தொழில் தொடங்க திட்டமிட்டால், விவசாயம் சார்ந்த பொருட்கள், கோழி வளர்ப்பு, சில்லறை விற்பனை, விதைகள் மற்றும் உரங்கள் போன்ற துறைகளில் முதலீடு செய்யலாம். இங்கே கிராமங்களில் அதிக லாபம் ஈட்டக்கூடிய 10 சிறந்த தொழில்களைப் பற்றி பார்க்கலாம்:
டீ கடை:
டீ கடைகள் கிராமப்புறங்களிலும் அதிகமான தேவையை கொண்டுள்ளது. மனிதர்கள் டீ மீது கொண்டிருக்கும் காதல் பற்றி அனைவரும் தெரிந்த ஒன்று தான்.கிராமங்களில் சிறந்த இடத்தைத் தேர்வு செய்து, கிராமத்தில் டீ கடை தொடங்குவது நிச்சயமாக லாபத்தை கொடுக்கும்.
மாவு மில்:
மக்கள் பலரும், மாவுகளைத் தாங்களே தயாரிக்க விரும்புவதால், மாவு மில்கள் மீது அதிக தேவை காணப்படுகிறது. குறைந்த முதலீட்டில், இது ஒரு நம்பிகையான தொழிலாக இருக்கலாம்.
பால் தொழில்:
பால் உற்பத்தி செய்து நகரங்களுக்கு வழங்குவது அல்லது பால் சப்ளை யூனிட் தொடங்குவது மூலம், பால் பண்ணை தொழில் லாபகரமாக இருக்கும். இது கிராமப்புறங்களில் வெற்றிகரமாக நடைபெறும் ஒரு முக்கியமான தொழிலாகும்.
மெடிக்கல் ஷாப் (ஃபார்மஸி):
மருந்துகள் குறித்த தேவை அனைத்து பகுதிகளிலும் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில், ஆரம்ப முதலீட்டிற்கு பிறகு, ஃபார்மஸி தொழில் பாதுகாப்பான மற்றும் நம்பகமான வருமானம் தரும்.
சில்லறை விற்பனை கடை (ரீடெயில் ஷாப்):
மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சிறு வணிக யோசனைவயாக சில்லறை விற்பனை கடை அமைக்கலாம். கேண்டி ஷாப் முதல் ஜெனரல் ஸ்டோர் வரை மேலும், இதற்கு லாபம் அதிகமாக இருக்கும்.
கோழிப்பண்ணை:
குறைந்த முதலீட்டில் கோழி வளர்ப்பதன் மூலம் சிறந்த லாபம் பெறலாம்.இந்தத் தொழிலை சிறிய அளவில் தொடங்கி, பின்னர் தொழிலை விரிவாக்கலாம்.இந்த தொழில் ஒரு அருமையான தொழில் ஆகும்.
ஆயில் மில்:
சோயாபீன்ஸ், நிலக்கடலை மற்றும் கடுகு போன்றவற்றில் இருந்து எண்ணெய் பிரித்தெடுக்க கூடிய வகையில் ஆயில் மில்கள் தொடங்கலாம்.இந்த தொழில் நல்ல வருமானம் காணலாம்.
வாழைப்பழ சிப்ஸ் தயாரிப்பு:
குறைந்த முதலீட்டில், வாழைப்பழங்களை பயன்படுத்தி ஆரோக்கியமான சிப்ஸ்கள் தயாரித்து விற்பனை செய்யலாம். இதற்கு மக்களின் மத்தியில் எப்பொழுதும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
இஞ்சி பூண்டு பேஸ்ட் தயாரிப்பு:
இஞ்சி பூண்டு பேஸ்டுக்கு மக்களின் மத்தியில் எப்பொழுதும் மிகுந்த தேவை இருந்து வருகிறது.இந்நிலையில் இதைத் தயாரித்து விற்பனை செய்வது லாபகரமான தொழிலாக இருக்கும்.
இன்டர்நெட் கஃபே:
சில கிராமங்களில் இன்னும் இன்டர்நெட் வசதி பொதுவானதாக இல்லை. பிரிண்ட் அவுட் போன்ற வசதிகளுடன் கூடிய இன்டர்நெட் கஃபே திறப்பது நல்லதொரு வணிக யோசனை ஆகும்.இதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும்.