சாதாரண கோலப்பொடி தொழிலை, முதன்மையாக வைத்துக் கொண்டு அதில் பெரிதாக சாதிக்க முடியுமா, பெரிதாக இலாபம் பார்க்க முடியுமா என்று கேட்டால் ஆம் முடியும், அது குறித்து தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
வீட்டு வாயிலில் கோலம் இடுதல் என்பது தமிழர்களின் பாரம்பரியமான ஒன்று, தமிழகத்தின் மெட்ரோ சிட்டிகளை தவிர்த்து இன்னுமே, பல கிராமங்களில் கோலமிடுதல் என்பதை தினசரி இருமுறை செய்து தான் வருகிறார்கள். ஆனால் பாரம்பரிய முறையில் அரிசி மாவு தான் கோலப்பொடியாக பயன்படுத்தப்படும், ஆனால் தற்போதெல்லாம் சுண்ணாம்பு கலந்த மணல் துகள்களே கோலப்பொடியாக பெரும்பாலும் பயன் படுத்தப்பட்டு வருகின்றன.
சரி, கோலப்பொடியை நாமே தயாரிக்க முடியுமா?
ஆம் கோலப் பொடியை நாமே தயாரிக்க முடியும், ஆனால் நாமாக தயாரிக்கும் போது அதற்கான செலவீனமும், வேலைப் பளுவும் அதிகரித்து விடும். பொதுவாக கோலப்பொடிகளை மொத்த விலையில் பல நிறுவனங்கள் விற்று வருகின்றன. ஒரு டன் விலையே 3,500 முதல் 4,000 வரையில் தான் விற்கப்படுகின்றன. அதாவது ஒரு கிலோவே, நமக்கு 4 ரூபாய் தான் அசலாகிறது. அதை பேக்கிங் செய்து மார்க்கெட்டிங் செய்வதில் தான் இலாபத்திற்கான திறமை இருக்கிறது.
சரி, 1 கிலோ எவ்வளவுக்கு விற்கலாம்?

பொதுவாக, வெள்ளை கோலப்பொடிகள் தான் நமக்கு இந்த விலைக்கு கிடைக்கும், லோக்கல் பகுதிகள் என்றால் பேக்கிங் செய்து ஒரு கிலோ 40 முதல் 50 ரூபாய்க்கு விற்கலாம், அவ்வாறு விற்கும் போதே நமக்கு அதில் பன்மடங்கு இலாபம் கிடைக்கும். அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து ஆன்லைனில் விற்கும் பட்சத்தில் கிலோ 80 ரூபாய் வரை நிர்ணயம் செய்யலாம். ஆன்லைனில் பேக்கிங் செய்யப்பட்ட கோலப்பொடிகள் 180 ரூபாய் வரை விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அவ்வளவு அதிகம் விற்பதைக் காட்டிலும் குறைவாக இலாபம் வைத்து விலை நிர்ணயம் செய்யும் போது விற்பனை அதிகம் ஆகும். கலர்கள் வாங்கி கரைத்து வெள்ளைப் பொடியோடு மிக்ஸ் செய்து காய வைத்து, கலர் பொடியாகவும் விற்கலாம். வெள்ளைப் பொடிகளை விட கலர் பொடிகளில் இலாபம் இன்னும் அதிகமாக கிடைக்கும். ஆனால் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் மட்டுமே கலர் பொடிகள் அதிகமாக போகும்.
” சரியான மார்க்கெட்டிங்கும், உழைப்பும் இருக்கும் பட்சத்தில் ஒரு மாதத்திற்கு ஒரு டன் வெள்ளை கோலப்பொடிகள் விற்றாலே, மற்ற செலவுகள் எல்லாம் கழித்தது போக 40,000 முதல் 50,000 வரை இத்தொழில் சம்பாதிக்க முடியும் “