• India

தனியார் கல்வி நிறுவனங்கள் மீது ஜிஎஸ்டி விதிக்கப்படாது! கல்வி துறையில் புதிய முன்னேற்றம்..நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

GST New Update In Tamil | Business News In Tamil

GST New Update In Tamil -ஜிஎஸ்டி கவுன்சிலின் 54-வது கூட்டத்தில், பல முக்கிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். சாமானிய மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

புற்றுநோய் சிகிச்சை மருந்துகளுக்கான ஜிஎஸ்டி 12% இருந்ததை 5% ஆக குறைப்பதன் மூலம், புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சை செலவில் சுமை குறையும். அதுபோல, ஸ்னாக்ஸ் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தின்பண்டங்களின் ஜிஎஸ்டி விகிதம் 18%-இல் இருந்து 12%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.


ஹெலிகாப்டர் சேவைகளுக்கும் ஜிஎஸ்டி 5%-ஆக குறைக்கப்பட்டதால், இந்த சேவைகள் நாடு முழுவதும் விரைவாக வளரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் மையத்தால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களின் நிதிக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே நேரத்தில், கார் இருக்கைகளுக்கான ஜிஎஸ்டி 18%-இல் இருந்து 28%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. EV சார்ஜிங் நிலையங்கள் மற்றும் உடல்நலக் காப்பீடு தொடர்பாகவும் ஜிஎஸ்டி கவுன்சில் மாற்றங்களை பரிசீலித்துள்ளது.