உலக அளவில் பேரீச்ச பழம், சுமார் 75-77 சதவிகிதத்தை அரபு நாடுகள் பூர்த்தி செய்கின்றன. இந்த பேரீச்ச பழத்தில் பல நன்மைகள் இருக்கிறது. B6, K போன்ற வைட்டமின்கள், பொட்டாசியம், மெக்னீசியம், தாமிரம் போன்ற தாதுக்கள், குளுக்கோஸ், பிரக்டோஸ் எனப் பல நன்மைகள் உள்ளது.
அதுமட்டுமின்றி இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இந்த பேரீச்ச பழம் பயன்படுகிறது. மேலும் இயற்கையான முறையில் பிரசவம் ஏற்படவும் இந்த பழம் உதவுகிறது. இத்தனை நன்மைகள் இருப்பதால் அரபு நாடுகள் பேரீச்சம் பழத்தை அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்நிலையில் பேரீச்சம் பழத்தின் மகசூலை அதிகரிக்க இந்திய மாட்டு சாணங்களை அரபு நாடுகள் அதிகம் இறக்குமதி செய்து வருகிறது. மாட்டு சனங்களை கிலோ ரூபாய் 20 முதல் 50 வரை விலை கொடுத்து வாங்குகிறார்கள்.
அண்மையில் 192 மெட்ரிக் டன்மாட்டு சாணத்தை குவைத் இறக்குமதி செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இதன் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
அரபு நாட்டில் உள்ள வேளாண் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில்,மாட்டுச் சாணத்தைப் பொடி செய்து பயன்படுத்துவதால் பேரீச்சம்பழத்தின் மகசூல் அதிகரிக்கிறது கண்டுபிடித்துள்ளனர். இதன் காரணமாகவே மாட்டுச் சாணத்தை அதிக அளவில் இறக்குமதி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.