UPI Daily Transaction Limit -இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) தற்போது யுபிஐ-ஐ (Unified Payments Interface) பயன்படுத்தி ரூ.5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்ய அனுமதித்து, மூன்று முக்கிய பிரிவுகளுக்கு உச்சவரம்பை உயர்த்தியுள்ளது. இந்த மாற்றம் முக்கிய செலவுகளுக்கு பயனளிக்கும் வகையில், குறிப்பிட்ட பயனாளர்களுக்கு அதிக சலுகைகளை வழங்கும் நோக்கத்தோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பணம் செலுத்துபவர்களுக்கு, யுபிஐ பரிவர்த்தனை உச்சவரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது:
வரி செலுத்துதல், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ,IPO மற்றும் RBI சில்லறை நேரடி திட்டங்கள் அமல்படுத்தும் தேதி,இந்த புதிய விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன, மேலும் அனைத்து வங்கிகளும் இதை நடைமுறைக்கு கொண்டுவர தீவிர ஏற்பாடுகள் செய்து வருகின்றன. செப்டம்பர் 15, 2024-க்குள் இது முழுமையாக செயல்படுத்தப்படும்.
வங்கி வாரியான உச்சவரம்புகள்,சராசரியாக, ஒரு நாளில் யுபிஐ பரிவர்த்தனை வரம்பு ரூ.1 லட்சமாக இருக்கும். இருப்பினும், வங்கிகள் தங்களின் சொந்த வரம்புகளை அமைக்க அதிகாரம் பெற்றுள்ளன. சில வங்கிகளில், எடுத்துக்காட்டாக அலகாபாத் வங்கி, UPI பரிவர்த்தனைக்கு ரூ.25,000 வரை மட்டுமே அனுமதிக்கின்றன, HDFC மற்றும் ICICI போன்றவை ரூ.1 லட்சம் வரை அனுமதிக்கின்றன.
சிறப்புப் பிரிவுகளுக்கான பரிவர்த்தனைகள், மூலதனச் சந்தைகள், வசூல், காப்பீடு போன்றவை தினசரி ரூ.2 லட்சம் வரம்புடன் யுபிஐ பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கின்றன.