• India

தெலுங்கு நடிகர் ராம் சரணின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Ram charan Net Worth details

By Dhiviyaraj

Published on:  2025-01-10 12:46:31  |    51

தெலுங்கு சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி மகன் தான் ராம் சரண். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'சிறுத்த' என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படத்தை தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து  தென்னிந்திய அள்வில் பிரபல நடிகராக மாறினார்.

தற்போது தமிழில் பிரம்மாண்ட இயக்குனராக இருக்கும் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் படத்தின் நடித்துள்ளார். இப்படம் இன்று வெளியாகி கலவையான விமர்சனம் பெற்று உள்ளது. 

இந்நிலையில் நடிகர் ராம் சரணின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல பரவி வருகிறது. அதன்படி,  சிரஞ்சீவியின் ஒரே மகனாக இவரின் சொத்து மதிப்பு ரூ.1300 கோடிக்கு மேல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. 


ஐதராபாத்தில் 25000 சதுர அடி கொண்ட பிரம்மாண்ட வீட்டில் ராம்சரண் வசித்து வருகிறாராம். இந்த வீட்டின் மதிப்பு ரூ.40 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.  மேலும் இவரிடம் ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் , மெர்சிடஸ் மேபேக் , ஃபெராரி போர்ட்டோஃபினோ மற்றும் ஆஸ்டன் மார்ட்டின் என பல கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கார்கள் இருக்கின்றன.

அதுமட்டுமின்றி இவர் 34 பிராண்டுகளின் விளம்பர தூதராக இருக்கிறார், ஒரு விளம்பரத்திற்கு இவர் ரூ. 1.8 கோடி சம்பளமாக வாங்குவதாக தகவல் தெரிவிக்கின்றன. தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தும் ராம் சரண், அதுபோக டுரூஜெட் என்கிற விமான நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.