Indian Producers Choosing To Export Their Finest Products Overseas - பிரபல பிரிட்டன் நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்று வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் தாங்கள் தயாரிக்கும் முதல் தர பொருட்களை எல்லாம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அங்கு சந்தைப்படுத்திவிட்டு, அவர்கள் தயாரிக்கும் பொருட்களின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தர பொருட்களை இந்தியாவில் சந்தைப்படுத்தி வருவதாக தகவல் விடுத்து வருகின்றனர்.
அதாவது இந்தியாவில் தயாரிக்கப்படும் விளை பொருட்கள் ஆனாலும் சரி, எலக்ட்ரானிக் பொருட்கள் ஆனாலும் சரி, பெரும்பாலும் இந்திய உற்பத்தியாளர்கள் அதில் இருந்து முதல் தர பொருட்களை பிரித்து எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்விடுகின்றனராவாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் தர பொருட்களை மட்டுமே இந்திய விற்பனையாளர்களிடம் சந்தைப்படுத்துகின்றனராம்.
தேயிலை, நட்ஸ் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் ஐட்டங்கள் மற்றும் ஒரு சில விவசாய விளை பொருட்கள் உள்ளிட்டவைகள் எல்லாம் இதில் அடங்கும் என கூறப்படுகிறது, பொதுவாக இரண்டு காரணங்களுக்காக உற்பத்தியாளர்கள் முதல் தரங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாக கூறப்படுகிறது, முதல் காரணம் இலாப நோக்கம், இரண்டாம் காரணம் வெளிநாடுகளில் இருக்கும் இறக்குமதிக்கான கட்டுப்பாடு.
பொதுவாக இந்தியாவில் முதல் தர பொருட்களுக்கு கிடைக்கும் விலையை விட, வெளிநாடுகளில் அதிக விலை கிடைக்கிறதாம், இந்த இலாபம் தான் ஏற்றுமதியாளர்களின் முதல் நோக்கம், அதற்கடுத்ததாக வெளிநாடுகளில் அவ்வளவு எளிதி இரண்டாம்தர பொருட்களை சந்தைப்படுத்தி விட முடியாது, அங்கு இருக்கும் கட்டுப்பாடுகள் இந்தியாவை விட மிகவும் கடுமையானது.
" இந்த காரணங்களால் தான் இந்திய விளை பொருட்களும், இந்திய உற்பத்திகளின் முதல் தர பொருட்களும் முதலில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆவதாக பிரிட்டன் நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது "