Fengal Cyclone: Thousands Of Lorrys Stopped Outside Of Chennai - ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் அதிகாலை முதலே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டி தீர்த்து வருகிறது, அதிகாலையே பெரும்பாலான சாலைகளில் மழை நீர் தேங்க ஆரம்பித்து விட்டது, மழையின் தீவிரம் இப்போதே இப்படி இருக்கும் போது புயல் கரையைத் தொடும் போது மழை எப்படி இருக்குமோ என அச்சத்தில் மக்கள் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னைக்கு வரும் தினசரி சரக்கு லாரிகள் அனைத்தும் சென்னைக்கு அவுட்டரில் நெடுஞ்சாலைகளில் நகரத்திற்குள் நுழைய முடியாமல் வரிசையாக நிற்பதாக தகவல், கிட்டதட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல சரக்கு லாரிகள் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு இருக்கின்றன, கடுமையான மழை, நீர்தேக்கம் ஆகியவற்றால் அவைகள் நகரத்திற்குள் நுழைய முடியாத சூழல் நிலவி வருகிறது.
காய்கறிகள், பெட்ரோல், டீசல், ஆட்டோமொபைல் பொருள்கள், பால், ரேசன் பொருள்கள் என பலவற்றை சுமந்து செல்லும் சரக்கு லாரிகள் என்பதால் சென்னைக்கு செல்ல வேண்டிய பொருள்களும் முடங்கி கிடக்கின்றன, லாரி டிரைவர்கள் பலரும் சாப்பிட உணவில்லாமல் கிடைக்கின்றனர், சரக்கு லாரியில் இருக்கும் காய்கறிகள் எல்லாம் நனைந்து அழுகும் வாய்ப்பு இருப்பதால் ஏற்றி விட்ட விவசாயிகளின் நிலையும் கவலைக்குரியதாக மாறி இருக்கிறது.
கோயம்பேடு மார்க்கெட்டுகளிலும் காய்கறி வரத்து வெகுவாக சரிந்து இருக்கிறது, பால் இருப்பு பெரும்பாலான இடங்களில் தட்டுப்பாடாக இருக்கிறது, அரசு சார்பில் 24 மணி நேரங்களிலும் ஆவின் பாலகங்கள் செயல்படும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது, மாநகராட்சிகள் சார்பில் வீடு வீடுகளாக சென்று காய்கறிகள் வழங்கும் செயல்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.