• India
```

அட்வென்ச்சர், ஆஃப்ரோட் ரைடிங் ஏற்ற பைக் இதுதான்!! புதிய அப்டேட்..

xpulse 210 new model launch update

By Dhiviyaraj

Published on:  2025-01-20 14:11:55  |    16

ஹீரோ மோட்டோ கார்ப், தனது புதிய XPulse 210 மோட்டார்சைக்கிளை பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 இல் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இளைஞர்களுக்கு இரு சக்கர வாகன மீது அதிக மோகம் கொண்டவராக இருக்கின்றனர். அது தொடர்பான செய்திகளை தேர்ந்துகொள்ளவோம் ஆர்வம் காட்டுகிறார்கள். தற்போது அட்வென்ச்சர் மற்றும் ஆஃப்ரோட் ரைடிங் ஏற்ற பைக் குறித்து பார்க்கலாம் வாங்க..

முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோ கார்ப், தனது புதிய XPulse 210 மோட்டார்சைக்கிளை பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 இல் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த புதிய மாடல் XPulse 200 மாடலை விட மேம்பட்ட அம்சங்களை கொண்டதாகவும், விலையும் அதிகமாகவும் உள்ளது. XPulse 210 விலை ₹1.76 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதுடன், இது XPulse 200-ஐ விட ₹24,000 அதிகம்.


வடிவமைப்பு மற்றும் டிசைன்:

XPulse 210, அதன் சீரிஸின் அடையாளமான ஆஃப்ரோட் தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரவுண்ட் எல்இடி ஹெட்லைட், டிரான்ஸ்பரன்ட் வைசர், எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள், டியூபுலர் ஹேண்டில்பார், மற்றும் சிங்கிள் பீஸ் சீட் போன்ற அம்சங்கள், நகரப்பயணங்களுக்கும், ஆப் ரோடு பயன்பாட்டிற்கும் ஏற்றதாக உள்ளன.

எஞ்சின் மற்றும் செயல்திறன்:

XPulse 210, 210cc, சிங்கிள்-சிலிண்டர், லிக்விட்-கூல்டு, 4-வால்வ் எஞ்சினை கொண்டுள்ளது. இது 24.6 bhp பவரையும், 20.7 Nm பீக் டார்க்கையும் வழங்குகிறது. இதில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளதால், நீண்ட பயணங்கள் மற்றும் உயர் வேக சவாரிக்கு ஏற்றதாக இருக்கும்.

XPulse 210, அதன் மேம்பட்ட அம்சங்களுடன், அட்வென்ச்சர் மற்றும் ஆஃப்ரோட் ரைடிங் விரும்புவோருக்கான சிறந்த தேர்வாக இருக்கும்.