• India
```

20 அரண்மனைகள், 700 சொகுசு கார்கள்.. பிரமிக்கவைக்கும் ரஷ்யா அதிபர் புடினின் சொத்து மதித்து !!

Vladimir Putin Net Worth Details

By Dhiviyaraj

Published on:  2025-01-28 16:13:13  |    117

2007 ஆம் ஆண்டு அமெரிக்க செனட் நீதித்துறைக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் படி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் சொத்துக்கள் 200 பில்லியன் டாலர் மதிப்பை எட்டியிருக்கலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில், உலகின் பணக்காரர்கள் பற்றிய தகவல்களை வெளியிடும் ஃபோர்ப்ஸ் இதழ், புடினின் சொத்துக்களை சரிபார்க்க முடியாததால் அவரை அந்த பட்டியலில் சேர்க்கவில்லை.

சில தகவல்களின் அடிப்படையில், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், ஓரக்கிள் நிறுவனர் லாரி எலிசன் மற்றும் பிரான்சின் கோடீஸ்வரர் பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோரைக் கூட புடின் மீறியுள்ளாரா? என்ற கேள்வி எழுகிறது.

ஆடம்பர வாழ்க்கை மற்றும் சொத்துக்கள்

அமெரிக்காவின் புகழ்பெற்ற "ஃபார்ச்சூன்" பத்திரிகையின் தகவல்படி, 20-க்கும் மேற்பட்ட அரண்மனைகள் மற்றும் 700-க்கும் அதிகமான சொகுசு கார்கள் புடினிடம் உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், 900 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சொகுசு யாட் (படகு இல்லம்) அவர் வசம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், புடின் 60,000 முதல் 500,000 டாலர் மதிப்புள்ள ஆடம்பர கைகடிகாரங்களை வைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.