• India
```

அமெரிக்காவின் பரஸ்பர வரி என்பது...இந்தியாவிற்கு சாதகமா...பாதகமா...?

US Reciprocal Tax VS India

By Ramesh

Published on:  2025-03-07 10:07:02  |    50

Reciprocal Tax VS India - அமெரிக்கா அறிவித்து இருக்கும் பரஸ்பர வரி என்பது இந்தியாவிற்கு சாதகமா பாதகமா என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

அதிபர் ட்ரம்ப் அவர்கள் அமெரிக்க அதிபராக பதவியேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார், எதிரி நாடாய் இருந்தால் என்ன நட்பு நாடாய் இருந்தால் என்ன எந்த நாடாக இருந்தாலும் அமெரிக்காவிற்கு சிறு துளி ஆதரவின்றி செயல்பட்டாலும் கூட, பதிலுக்கு பதில் தடாலடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ட்ரம்ப் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பொருள்களுக்கு இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகள் அதீத வரி விதிப்பதாகவும் இதனால் அமெரிக்க கார்பரேட்கள் பல இந்திய மார்க்கெட்டிற்குள் நுழைய முடியாத சூழல் இருப்பதாகவும் ட்ரம்ப் புகார் தெரிவித்து இருந்தார், இந்தியாவும் அந்த புகாருக்கு பதில் தெரிவித்து இருந்தாலும் ட்ரம்ப் அதை ஏற்றுக் கொள்வதாக இல்லை.

கனடா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா இனி பரஸ்பர வரி விதிக்கும் என அமெரிக்க நாடாளுமன்றத்தில் ட்ரம்ப் சூளுரை செய்தார், ஆனால் இதனால் யாருக்கு பாதகம் என்று யோசிக்கும் போது மேற்பட்டமாக யோசித்தால் அதில் இந்தியா, கனடா, சீனா உள்ளிட்ட நாடுகள் தான் பாதிப்படையும் என்பது போல தோன்றும், ஆனால் இந்த வர்த்தக போர் இந்திய சந்தையை உயர்த்தவும் வாய்ப்பு அளிக்கும்.

அமெரிக்கா இவ்வாறாக பரஸ்பர வரிகளை அள்ளி வீசும் போது அந்த நாட்டின் சந்தை என்பது மந்தம் அடையும், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளை நாடி, பிற நாடுகள் தங்கள் பொருள்களை சந்தைப்படுத்தும் வாய்ப்பு அதிகமாகும், இந்திய பொருள்களுக்கான டிமாண்டும் சர்வதேச அளவில் அதிகரிக்கும், மொத்தத்தில் அமெரிக்காவின் இந்த பரஸ்பர வரி அமெரிக்காவையே வீழ்த்த வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

" இந்த பரஸ்பர வரி இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஏற்றுமதி இறக்குமதியை பாதித்தாலும், இன்னொரு பக்கம் பிற நாட்டு முதலீடுகள் இந்தியாவிற்குள் வர அதி வழி வகுக்கும் "