• India
```

எதிரி நாடுகளை விட...நட்பு நாடுகளே அதிகம் வரி விதிக்கின்றன...அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆதங்கம்...!

Trump Warn US Allies

By Ramesh

Published on:  2025-02-14 08:44:00  |    43

US Allies Worse Than Enemies: Trump - அமெரிக்காவின் மீது எதிரி நாடுகளை விட, நட்பு நாடுகளே அதிகம் வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆதங்கத்துடன் தெரிவித்து இருக்கிறார்.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார், பொதுவாக ட்ரம்ப் எதிரி நாடுகளை மட்டும் சீண்டாமல், அண்டை நாடுகளையும் தனது நடவடிக்கைகளால் சீண்டி வருகிறார், முக்கியமாக அமெரிக்க பொருட்கள் மீது அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார்.

இந்தியா உட்பட அமெரிக்காவின் பல நட்புறவு நாடுகள் இந்த எச்சரிக்கைக்கு ஆளாகி வருகின்றன, ஆனால் இந்தியா தரப்பில் இந்த வரி விதிப்பு குறித்து கூறும் போது, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 30 பொருள்களுக்கு மேல் வரி 7.5% தான் விதிக்கப்படுகிறது, குறிப்பிட்ட ஒரு சில பொருள்களுக்கு மட்டுமே அதிக வரி விதிக்கப்படுவதாக கூறி இருக்கிறது.



இந்தியா ஒன்றும் அதிக வரி விதிக்கும் நாடுகள் அல்ல, இந்தியாவின் சராசரி வரி விகிதம் 11.55 சதவிகிதத்தில் இருந்து 10.6 சதவிகிதமாக குறைந்து இருப்பதையும் இந்தியா சுட்டிக் காட்டி இருக்கிறது, ஆனால் ட்ரம்ப் தொடர்ந்து இதை மறுத்து வருகிறார், எதிரி நாடுகளை விட நட்பு நாடுகளே அமெரிக்காவின் மீது அதிகம் வரி விதிப்பதாக ட்ரம்ப் தொடர்ந்து ஆதங்கத்துடன் தெரிவித்து வருகிறார்.

எலான் மஸ்க் உள்ளிடோர் இந்தியாவில் வர்த்தகம் செய்ய நினைக்கும் போது, இந்தியாவில் இருக்கும் வரி விதிப்புகள் அதற்கு தடையாக இருப்பதாகவும் ட்ரம்ப் சுட்டி காட்டி இருக்கிறார், ட்ரம்பின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளும் எச்சரிக்கையும் இந்தியாவின் மீது விழுந்து கொண்டே இருக்கிறது, இந்தியா அதை எப்படி எதிர்கொள்ள போகிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.