Tech LayOffs In 2024 - 2024 நிதி ஆண்டில் மட்டும் உலகளாவிய அளவில் கிட்டத்தட்ட ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் தொழில் நுட்ப நிறுவன ஊழியர்கள் வேலையை இழந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது, இன்டெல், டெஸ்லா, சிஸ்கோ, மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பல சர்வதேச நிறுவனங்கள் கடந்த 2024 யில் தங்களது நிறுவனத்தில் வேலை இழப்பை அறிவித்து இருந்தன.
இன்டெல் நிறுவனம், கடும் நிதிச்சுமையால் உலகளாவிய போட்டி களத்தில் இருந்தே சற்று பின் தங்கி விட்டது என்று சொல்லலாம், இதனால் நிறுவனத்தின் தேவையில்லாத செயல்பாடுகளை குறைக்க, கிட்டத்தட்ட ஒட்டு மொத்த ஊழியர்களுள் 15% ஊழியர்கள், அதாவது கிட்டத்தட்ட 15,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவெடுத்து அதை நிறைவேற்றவும் செய்தது.
இது போல எலான் மஸ்க் அவர்களின் டெஸ்லா நிறுவனமும், உலகளாவிய அளவில் 20,000 பணி நீக்கங்களை கடந்த 2024 யில் நிறைவேற்றியது, சிஸ்கோ நிறுவனம் 10,000 ஊழியர்களையும், SAP நிறுவனம் 8,000 ஊழியர்களையும், டெல் 6,000 ஊழியர்களையும், மைக்ரோசாப்ட் 2,500 ஊழியர்களையும், PayPal 2,500 ஊழியர்களையும் கடந்த 2024 ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்து இருந்தது.
பெரும்பாலும் இந்த பணி நீக்கங்களுக்கு காரணம், நிறுவனங்களுக்குள் நிலவும் நிதிச்சுமை என கூறப்படுகிறது, இது போக செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கமும் தற்போது தொழில் நுட்ப நிறுவனங்களுக்குள் வெகுவாக இருப்பதால், அதன் காரணத்தாலும், ஊழியர்களை தொடர்ந்து நிறுவனங்கள் குறைத்து வருவதாக கூறப்படுகிறது.