• India
```

முகேஷ் அம்பானி..இல்லத்தில் 600 பேர் பணியாற்றுகிறார்கள்..சம்பளம் லட்சக்கணக்கில்!

Mukesh Ambani Cook Salary​ | Mukesh Ambani House workers Salary

Mukesh Ambani Cook Salary​ -முகேஷ் அம்பானி, இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமையாளர், தனது வீட்டில் உள்ள சமையல்காரருக்கான மாத சம்பளம் ரூ. 2 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்டிலியா இல்லத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களின் வருமானம் குறித்து மேலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.அதை பற்றரி விரிவாக பார்க்கலாம்.

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தனது குடும்பத்துடன் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துவருகிறார். இவரது குடும்பம் எளிய உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவதற்காக கூறப்படுகிறார்கள்.

இந்த நிலையில், அம்பானியின் அன்டிலியா இல்லத்தில் உள்ள சமையல்காரர் மாதம் ரூ. 2 லட்சம் சம்பாதிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரது ஆண்டு வருமானம் ரூ. 24 லட்சம் ஆகும். மேலும், கல்வி உதவி போன்ற பல்வேறு நன்மைகளும் இவருக்கு கிடைக்கின்றன.


முகேஷ் அம்பானி, பருப்பு, ரொட்டி, சாதம் மற்றும் சப்பாத்தி போன்ற எளிய உணவுகளை விரும்பி சாப்பிடுகிறாராம். அவர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இட்லி-சாம்பார் மற்றும் பப்டி சாட், சேவ் பூரி போன்ற தின்பண்டங்களை விரும்புகிறார்.

அன்டிலியாவில் பணியாற்றும் ஊழியர்கள் பலர் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவதால், அம்பானியின் வீட்டு ஓட்டுநர் கூட மாதம் ரூ. 2 லட்சம் சம்பாதிக்கிறாராம். உலகிலேயே மிக விலையுயர்ந்த குடியிருப்புகளில் ஒன்றாக உள்ள அன்டிலியாவில் சுமார் 600 பேர் பணியாற்றி வருகின்றனர்.