Mizoram Announced Non Performing Government Employees LayOff - அரசு வேலைகளில் ஒழுங்காக பணி புரியாதவர்கள், ஒழுங்காக வேலை செய்யாதவர்கள் கண்டு பிடிக்கப்பட்டு நீக்கப்படுவார்கள் என மிசோரம் முதல்வர் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.
Mizoram Announced Non Performing Government Employees LayOff - பொதுவாக அரசுப் பணியாளர்களுக்கு எப்போதுமே ஒரு மெத்தனம் இருக்கிறது, நாம் ஒழுங்காக வேலை செய்யவில்லை எனில் நம்மை யார் நீக்க முடியும் என்று பல பணிகளில் தாமதம் காட்டுகின்றனர், ஒரு சிலர் எல்லாம் வாரத்தில் இரண்டு நாள் மட்டும் அலுவலகத்திற்கு வந்து விட்டு வாரம் முழுக்க அலுவலகத்தில் இருப்பதாக கணக்கு காட்டுகின்றனர்.
அதிலும் மேல் அதிகாரிகளில் ஒரு சிலர் அலுவலகத்தின் பக்கமே வராமல், கையொப்பங்களுக்காக மற்ற அதிகாரிகளை வீட்டிற்கு வர சொல்லி கையொப்பம் பெற சொல்கின்றனராம், இன்னும் சிலர் எல்லாம் அவர்கள் பார்க்கும் வேலையை ஒரு குறிப்பிட்ட சம்பளம் கொடுத்து பிறரை பார்க்க வைக்கின்றனராம், இவ்வாறாக தொடர்ந்து பல குற்றச்சாட்டுகள் அரசு அதிகாரிகள் மீது குவிந்த வண்ணம் இருக்கிறது.
இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் அறிந்த மிசோரம் முதல்வர், நேரடியாக அரசு அலுவலகங்களுக்கு விசிட் அடித்து இருக்கிறார், பொதுவான குற்றச்சாட்டுகளை எல்லாம் உண்மை என அறிந்த முதல்வர், இனி தனியார் கம்பெனிகளில் நடக்கும் LayOff போல, அரசு துறைகளில் நடக்கும் என எச்சரித்து இருக்கிறார், அதாவது ஒழுங்காக பணி புரியாத அரசு ஊழியர்கள் அனைவரையும் நீக்க முடிவெடுத்து இருப்பதாக தகவல்.
அதாவது மிசோரம் முதல்வரின் நேரடிக்கட்டுப்பாட்டில் ஒரு கண்காணிப்பு துறை அமைக்கப்பட்டு அனைத்து அரசு அலுவலகங்களும் ஒழுங்காக செயல்படுகிறதா என ஆராய்ச்சி செய்யப்படுமாம், அப்படி ஏதேனும் முறைகேடோ, அல்லது ஒழுங்காக பணி புரியாத அரசு ஊழியர்களோ அறியப்பட்டால் அவர்களை பாரபட்சம் இன்றி நீக்குவதற்கு முடிவெடுக்கப்படும் என மிசோரம் முதல்வர் அறிவித்து இருக்கிறார்.