Retail inflation Drops - கடந்த நிதி ஆண்டை பொறுத்தமட்டில் மக்களின் அத்தியாவசிய பொருள்களான அரிசி, ஆயில், பருப்பு வகைகள், பால் வகைகள் உள்ளிட்டவைகள் எல்லாம் இந்திய சந்தைகளில் மாதம் மாதம் விலையேற்றத்தை சந்தித்து வந்தன, இதனால் பணவீக்கமும் தேசத்தில் அதிகரித்து வந்தது, வெகுஜன மக்களும் பெரிதாக விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டு வந்தனர்.
ஆனால் நிகழ் நிதி ஆண்டில் தேசத்தின் நாணயச்சந்தைகளில் பணவீக்கம் 6.21 சதவிகிதத்தில் இருந்து 5.48 சதவிகிதமாக குறைந்து இருக்கிறது, 2025 நிதி ஆண்டில் இந்த பணவீக்கம் என்பது மேலும் குறைந்து 4.7 முதல் 4.8 வரை செல்ல வாய்ப்பு இருப்பதாக ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை கமிட்டி கணித்து இருக்கிறது, அத்தியாவசிய பொருள்களின் விலைகள் நிலை கொண்டிருப்பது பணவீக்கம் குறைவிற்கு காரணமாக கூறப்படுகிறது.
சரி இந்த பணவீக்கம் குறைந்ததனால் என்ன நடக்கலாம் என கேட்டால், முதலாவதாக மக்கள் அதிகமாக பயன்படுத்தும் அத்தியாவசிய பொருள்களின் விலை குறையலாம், இது போக ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டியை குறைக்கலாம், அதாவது ரெப்போ ரேட் குறையும், இதனால் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் கடனின் வட்டியும் குறைய வாய்ப்பு இருக்கிறது.
பிப்ரவரி 2025 யில் ரிசர்வ் வங்கியின் இந்த வட்டி வீத மாற்றம் இருக்கலாம் என கூறப்படுகிறது, ரிசர்வ் வங்கி அறிவிக்கும் பட்சத்தில் வீட்டுக்கடன், தனி நபர் கடன், கார் கடன் உள்ளிட்ட வங்கி கடனுக்கான வட்டி வீதத்தை பொத்துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் குறைக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல், என்ன மாற்றம் ஏற்பட இருக்கிறது என்பதை பொருத்து இருந்து பார்க்கலாம்.