• India
```

சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கை...மாதத்தவணைக்கு செலவிடும் இந்தியர்கள்...ஆய்வில் தகவல்...!

EMI And Indians

By Ramesh

Published on:  2025-02-21 19:08:35  |    16

Indians Paying One Third Of Salary For EMI - இந்தியர்கள் தங்களது சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கை மாதத்தவணைக்கு செலவிடுவதாக ஒரு ஆய்வில் தகவல் கிடைத்து இருக்கிறது.

பொதுவாகவே எல்லோருக்குமே வரவுக்கு மிஞ்சிய செலவு என்பது நிச்சயம் இருக்க தான் செய்யும், அதில் செலவுகள் என்பது மட்டும் அல்லாமல் ஒரு சில கடமைகளும் வாங்கும் சம்பளத்தில் கை வைக்கும், உதாரணத்திற்கு வீடு கட்டுவது, திருமணம் முடிப்பது, உடைமைகள் ஏதேனும் வாங்குவது போன்றவைகள் இணையும் போது வாங்கும் சம்பளம் பத்தாமல் போகும்.

அப்போது தான் கடன், கிரெடிட் கார்டுகள் என்று வேறு ஆப்சன்களுக்கு செல்வோம், அவ்வாறாக செல்லும் போது வாழ்க்கை முழுவதும் மாதத்தவணை நம்முடன் தொடரும் சூழல் நிலவி விடுகிறது, ஒரு சிலர் எல்லாம் வேலை பார்க்க ஆரம்பித்ததும் லோன் எடுத்து விட்டு த்னது சர்வீஸ் முடியும் மட்டிலும் மாதத்தவணை கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.



அந்த வகையில் இந்தியர்களும் மாதத்தவணையும் ஒட்டிப்பிறந்த இரட்டை பிறவிகள் போல ஆகி விட்டனர், சமீபத்தில் பிரபல நிறுவனம் ஒன்று, 30 இலட்சம் இந்தியர்களிடம் நடத்திய ஆய்வில், இந்தியாவில் ஒவ்வொரு சம்பளதாரர்களும், தங்களது சம்பளத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை மாதத்தவணைக்கு செலவிடுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

அதாவது கிட்டத்தட்ட தங்களது சம்பளத்தில் 33.33% தொகையை மாதம் மாதம் கடனுக்கும், கிரெடிட் கார்டுகளுக்கும் இந்தியர்கள் கட்டி வருகிறார்களாம், அதிலும் கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தி இந்தியர்கள் வாங்கும் பொருட்கள் 62% அளவிற்கு அழகு சம்பந்தப்பட்ட பொருட்களாகவும், நேர்த்திக்காக பயன்படுத்தப்படும் பொருள்களாகவும் இருப்பதாக தகவல்.