• India
```

தட்கல் மற்றும் முன்பதிவு முறைகேடு வழக்கில் 4,975 கைது!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்..

Illegal Train Booking In Southern Railways

By Dhiviyaraj

Published on:  2025-01-21 15:48:47  |    37

கடந்த ஆண்டு தட்கல் மற்றும் முன்பதிவு முறைகேடுகளில் ஈடுபட்ட பலரை கண்டறிந்து, 26,442 இணையதள ஐடிகளை முடக்கியுள்ளதாக தெற்கு ரயில்வே தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு தட்கல் மற்றும் முன்பதிவு முறைகேடுகளில் ஈடுபட்ட பலரை கண்டறிந்து, 26,442 இணையதள ஐடிகளை முடக்கியுள்ளதாக தெற்கு ரயில்வே தகவல் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின் படி, ரயில்வே பாதுகாப்பு படை (RPF), வணிக பிரிவு அதிகாரிகள், மற்றும் IRCTC இணைந்து தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். ரயில்வே டிக்கெட் கவுன்டர்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, பெருமளவில் டிக்கெட் வாங்குபவர்களை கண்காணித்து வருகின்றனர்.


கடந்த ஆண்டு முழுவதும் நடத்திய சோதனைகளில், 4,725 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4,975 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை மொத்தம் ₹53.38 கோடி மதிப்புள்ள 1,24,529 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. 100-க்கும் அதிகமான முறைகேடுகளில் ஈடுபட்ட 26,442 இணையதள ஐடிகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.