• India
```

ஒரு கிலோ பிளாஸ்டிக் கொடுத்தால்...ஒரு சாப்பாடு...அசத்தும் அசத்தலான உணவகம்...!

Free Food In Exchange Of Waste Plastics

By Ramesh

Published on:  2024-11-29 06:14:30  |    178

Free Food In Exchange Of Waste Plastics - பிரபல கார்பரேசன் உணவகம் ஒன்று ஒரு கிலோ வேஸ்ட் பிளாஸ்டிக் கொடுத்தால் ஒரு சாப்பாடை அதற்கு பதில் கொடுக்கிறது, அந்த உணவகம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Free Food In Exchange Of Waste Plastics - பொதுவாக பிளாஸ்டிக் என்பது உலகளாவிய அளவில் மிகப்பெரிய சிக்கலாக இருக்கிறது, எத்துனை யுகங்கள் ஆனாலும் மக்காத பொருளாக பிளாஸ்டிக் இருப்பதால், அது மண் வளத்திற்கும், நீர் வளத்திற்கும், நாளைய தலைமுறைக்கும் மிகவும் சவாலாக விளங்குகிறது, நிலத்தின் தன்மையையே பிளாஸ்டிக் மாற்றி விடுவதால் நாளை விவசாயத்திற்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மிகப்பெரிய சிக்கலாக இருக்கும்.

நிலத்திற்கு மட்டும் பிளாஸ்டிக் சிக்கல் அல்ல, கடல்களிலும் டன் கணக்கில் சேருகின்ற பிளாஸ்டிக் குப்பைகளால் பல வகையிலான கடல்வாழ் உயிரினங்கள் கடலில் வாழ முடியாமல் செத்து மிதக்கின்றன, கடல் பாசிகளின் தன்மையும் இதனால் மாறுவதால் மீன்களுக்கான உணவு பாதிக்கப்படுகிறது, இந்த கழிவுகள் விண்வெளியிலும் சுற்றிக் கொண்டு செய்ற்கை கோள்களையும் பாதிப்பதாக தகவல்.



இந்த நிலையில் தான் அம்பிகாபூர், சட்டீஸ்கரில் செயல்படும் ’Garbage Cafe' என்ற கார்பரேசன் உணவகம், இந்த பிளாஸ்டிக்குகளை நிலத்தில் தேங்க விடாமல் மறு சுழற்சி செய்யும் நோக்கில், ஒரு கிலோ வேஸ்ட் பிளாஸ்டிக்கை கொண்டு வருபவர்களுக்கு ஒரு வேளை உணவை வழங்குகிறது, பலரும் நிலத்தில் இருக்கும் வேஸ்ட் பிளாஸ்டிக்கை சேகரித்து இவர்களிடம் கொடுத்து உணவை பெற்றுச் செல்கின்றனர். 

அம்பிகாபூர் கார்பரேசனின் இந்த முன்னெடுப்பால் பிளாஸ்டிக் நிலத்தில் தேங்குவதும் குறையும், அதே சமயத்தில் பலரின் வயிற்று பசிக்கும் ஒரு தீர்வாகும், 2019 முதல் செயல்பட்டு வரும் இந்த உணவகத்தின் முன்னெடுப்பு தற்போது இணையங்களில் வைரலாகி பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது, இது போல தேசம் எங்கும் கார்பரேசன்கள் செய்யும் பட்சத்தில் நிலத்தில் பிளாஸ்டிக்குகள் தேங்குவது குறையும்.