Trump Ends Birthright Citizenship - இனி அமெரிக்காவில் பிறந்து விட்டால் அமெரிக்கர்கள் ஆகி விட முடியாது என ட்ரம்ப் திட்டவட்டமாக அறிவித்து இருக்கிறார்.
Trump Ends Birthright Citizenship - அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார், ஏற்கனவே வரி விதிப்பில் இந்தியாவிற்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்து இருந்தார், அதாவது அமெரிக்க பொருள்களுக்கு இந்தியாவில் அதிக வரி விதிக்கப்பட்டால், அதை விட அதிகமாக இந்திய பொருள்களுக்கு அமெரிக்காவில் வரி விதிக்கப்படும் என எச்சரித்து இருந்தார்,
இது மட்டும் அல்லாது குடியுரிமை சட்டத்திலும் புதிய விதி ஒன்றை அமல்படுத்தி இருக்கிறார், அதாவது இனி அமெரிக்காவில் பிறந்து விட்டால் மட்டும் ஒருவர் அமெரிக்கர் ஆகி விட முடியாது என அமெரிக்காவின் குடியுரிமை சட்டத்தையே ஒரு ஒரு ஆட்டு ஆட்டி இருக்கிறார், இதனால் இந்தியர்கள் மட்டும் அல்லாது பல நாடுகளை சார்ந்தவர்களும் ஆட்டம் கண்டு இருக்கின்றனர்.
பொதுவாக அனைவருக்குமே ஒரு வல்லரசு நாட்டில் குடியேற வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும், அந்த வகையில் திருமணம் ஆனதும் அமெரிக்காவிற்கு சென்று அங்கே ஒரு குழந்தையையும் பெற்று, அங்கேயே குழந்தைக்கு குடியுரிமையும் ஒரு சிலர் வாங்கியும் வந்தனர், இதனால் அமெரிக்காவில் வெளிநாட்டினரின் குடியேற்றம் கணிசமாக உயரவே ட்ரம்ப் தற்போது அதற்கு ஆப்பு வைத்து இருக்கிறார்.
இந்த திட்டத்தின் மூலம் இந்திய அமெரிக்கர்களாக அமெரிக்காவில் வசிக்கும், ஆயிரக்கணக்கான இந்திய குடும்பங்கள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, தற்போது அமெரிக்காவில் 54 இலட்சம் இந்தியர்கள் வசிப்பதாக தெரிகிறது, அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் 1.47 சதவிகிதத்தை இந்தியர்கள் தக்க வைத்து இருக்கும் நிலையில் இந்த புதிய திட்டம் அவர்களை குழப்பமடைய செய்து இருக்கிறது.