ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸை தோற்கடித்து குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார்.
கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில்,ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸை தோற்கடித்து குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். கடந்த ஜனவரி 20 ம் தேதி பதவியேற்பு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில், ஓஹியோவைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் ஆலர் காட்ரில், அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் 15 அடி உயரமான வெண்கல சிலையை வடிவமைத்துள்ளார். ‘டான் கொலாசஸ்’ என்று அழைக்கப்படும் இந்த சிலையை செய்து முடிக்க ரூ. 6.5 கோடி செலவாகியுள்ளது(1 மில்லியன் அமெரிக்க டாலர்).
கடந்த ஆண்டு ஜூலை 13ஆம் தேதி நடைபெற்ற பேரணியில், டிரம்ப் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் வர் கைகளை உயர்த்தி முழக்கமிட்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானது. அந்த முக்கிய தருணத்தை நினைவுபடுத்தும் வகையில், இந்தச் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த 6 டன் எடையுள்ள சிற்பத்தை, டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு அர்ப்பணிக்கும் நோக்கில் வடிவமைத்ததாக காட்ரில் தெரிவித்துள்ளார். மேலும், இந்தச் சிலை விரைவில் நாடு முழுவதும் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு, இறுதியில் டிரம்ப்பின் அதிபர் நூலகத்தில் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.