• India
```

Meta நிறுவனத்திற்கு சிக்கல்...213 கோடி அபராதம் விதித்த இந்திய போட்டி ஆணையம்...!

CCI imposes ₹213 crore penalty on Meta

By Ramesh

Published on:  2024-11-19 21:21:40  |    217

CCI imposes ₹213 crore penalty on Meta - பிரபல Meta நிறுவனத்திற்கு 213 கோடி அபராதம் விதித்து உத்தரவு இட்டு இருக்கிறது இந்திய போட்டி ஆணையம்.

CCI imposes ₹213 crore penalty on Meta - WhatsApp செயலியின் 2021 புதிய விதிகளால் வந்தது தான் இந்த பிரச்சினை, அதாவது 2021 ஆம் ஆண்டு WhatsApp புதிய விதிகள் ஒன்றை பயனர்களுக்கு கொண்டு வந்தது, அதாவது WhatsApp பயன்படுத்தும் பயனர்களது WhatsApp டேட்டாக்களை எல்லாம், Meta நிறுவனத்தின் பிற தயாரிப்புகளிலும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வாங்கும் ஒரு Agreement தான் அது.

அது என்னவென்றே தெரியாமல் பலரும் Agree கொடுத்து விட்டதால் Meta நிறுவனம் பயனர்களது WhatsApp டேட்டாக்களை எல்லாம் அவர்களது அனைத்து தயாரிப்புகளிலும் பயன்படுத்தி வந்தது, ஒரு கட்டத்தில் Meta தங்களது தகவல்களை பயன்படுத்துவதை உணர்ந்த பயனர்கள், சுதாரித்து இது குறித்து சமூக வலைதளங்களில் விவாதிக்க துவங்கினர்.



பின்னர் WhatsApp Privacy Policy 2021 க்கு பல இடங்களில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்தது, ஜெர்மனி இந்த விவகாரத்தில் Meta நிறுவனத்தை கடுமையாக எதிர்த்தது, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகள் Meta நிறுவனத்த விசாரித்து அவர்களுக்கு கடுமையான அபராதத்தை விதித்தனர், இந்தியாவிலும் இது பேசு பொருளாக மாறியதால் இந்த விவகாரம் CCI (Competition Commission Of India) க்கு சென்றது.

CCI இந்த விவகாரத்தை முழுமையாக விசாரித்து Meta நிறுவனம், ஒழுங்குமுறை விதிமுறைகளை மீறியதை உறுதி செய்தது, பின்னர் CCI Meta நிறுவனத்தை கடுமையாக விளாசியதோடு மட்டும் அல்லாமல், 213 கோடி அபராதம் விதித்தது, எந்த ஒரு காரணத்திற்காகவும் WhatsApp தனது டேட்டாக்களை Meta நிறுவனத்தின் பிற தயாரிப்புகளில் பயன்படுத்தக்கூடாது என எச்சரித்து இருக்கிறது.

" இது குறித்து Meta நிறுவனத்திடம் கேட்ட போது, Meta தங்களது பாலிசிகளில் எந்த தவறும் இல்லை, இது குறித்து மேல் முறையீடு செய்வோம் என கூறி இருக்கிறது "