தற்போதைய காலகட்டத்தில் தொழிற்சாலைகள், வாகன பயன்பாடு எனப் பல்வேறு காரணங்களால் காற்றின் தரம் நாளுக்குநாள் குறைந்து வருகிறது.
மேலும் கடந்த சில ஆண்டுகளாக டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் காற்று மாசுபாடு வெகுவாக அதிகரித்துள்ளது என கூறப்படுகிறது. இந்த காற்று மாசுபாட்டை கட்டுபடுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்த நிலையில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 9 ஜனவரி 2025 தினத்தில், தூய்மையான காற்று உள்ள நகரங்கள் மற்றும் மாசடைந்த காற்றுள்ள நகரங்களின் லிஸ்ட்டை வெளியிட்டு இருக்கிறது.
இந்தியாவிலே தூய்மையான காற்று உள்ள நகரங்களின் லிஸ்டில் தமிழ் நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. மேலும் 5வது இடத்தில் தஞ்சாவூர் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்க்கது.