• India
```

அடுத்த 5 வருடத்தில்...செயற்கை நுண்ணறிவு ஆனது...உலகின் 41% ஊழியர்களின் வேலைகளில் கை வைக்கும்...!

AI Will Replace 41 Percentage Of Jobs In Next 5 Years

By Ramesh

Published on:  2025-02-24 16:41:28  |    73

The Impact of AI on Employment Opportunities - செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் 41% ஊழியர்கள் வேலை இழக்க கூடும் என ஆய்வாளர்கள் கூறி இருக்கின்றனர்.

செயற்கை நுண்ணறிவு என்பது தற்போது உலகளாவிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு மிகப்பெரிய டெக்னாலஜியாக இருக்கிறது, ரொட்டி சுடுவதில் இருந்து ஒரு விமானத்தை இயக்கும் அளவிற்கு உலகில் செயற்கை நுண்ணறிவு ஒரு வித்தை காட்டிக் கொண்டு இருக்கிறது, எதிர் காலங்களில் யார் திறம்பட AI யை கையாள்கிறார்களோ அவர்கள் தான் இந்த நாட்டின் ஆளுமைகள்.

அந்த அளவிற்கு செயற்கை நுண்ணறிவின் தேவையும், செயற்கை நுண்ணறிவில் இருக்கும் விடயங்களும் பரந்து விரிந்து இருக்கின்றன, அதில் ஆராய்ச்சி செய்வதற்கும் கடல் அளவிலான கூறுகள் இருக்கின்றன, செயற்கை நுண்ணறிவி விரிவுபடுத்தப்படும் போது உலகின் அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.



இதில் முக்கியமாக மனிதன் ஆய்வு செய்யும் இந்த AI மனிதர்களையே Replace செய்யும் திறனையும் கொண்டு இருக்கிறது, தற்போதே பெரும்பாலான டெக் நிறுவனங்கள் தங்களது 20 சதவிகித ஊழியர்களை செயற்கை நுண்ணறிவால் இடம் பெயர்த்தி விட்டனர், எதிர்காலத்தில் இந்த சதவிகிதம், எதிர்காலம் ஏன் இன்னும் 5 வருடத்தில் AI பல நிறுவனங்களில் பல வேலை இழப்புகளை ஏற்படுத்தும்.

கிட்டத்தட்ட 41% ஊழியர்களை இன்னும் 5 வருடத்தில் செயற்கை நுண்ணறிவு ஆட்கொள்ளும் என கூறப்படுகிறது, மெடிக்கல் துறை முதல் தயாரிப்பு, சேவை என பல துறைகளிலும் AI யின் ஆதிக்கம் நிச்சயம் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர், AI மனிதனுக்கு மாற்று இல்லை ஆனால் மனித சக்திகளுக்கான ஒரு எச்சரிக்கை ஆக நிச்சயம் இருக்கலாம் எனவும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.