World's First Fully Solar Powered Airport - இந்தியாவில் செயல்பட்டு வரும் சோலார் பவர்டு விமான நிலையம் குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.
உலகளாவிய அளவில் பசுமை ஆற்றலுக்கான தேவை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது, அந்த வகையில் நீர் மின் ஆற்றல், கடல் அலையில் இருந்து ஆற்றல், வீட்டுக் கூரைகளில் சோலார், வயல்வெளிகளில் சோலார், கண்ணாடி சோலார் என பசுமை ஆற்றலை உற்பத்தி செய்வதற்கான சூழலை ஒவ்வொரு நாடுகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
சோலாரால் ஒரு வீடு முழுக்க இயங்கினால் ஆச்சரியப்படுவதாக இல்லை, ஒரு சிறிய தொழிற்சாலை இயங்கினால் ஆச்சரியப்படுவதாக இல்லை, ஆனால் ஒரு விமான நிலையமே இயங்குகிறது என்றால் நம்ப முடிகிறதா, ஆம் கேரளாவின் கொச்சியில் செயல்பட்டு வரும் கொச்சின் சர்வதேச விமான நிலையம் முழுக்க முழுக்க சோலாரால் செயல்பட்டு வருகிறதாம்.
உலகின் முதல் சோலார் பவர்டு விமான நிலையம் ஆகவும் இந்த கொச்சி சர்வதேச விமான நிலையம் அறியப்படுகிறது, கடந்த 2015 யிலேயே இதற்கான விதை விதைக்கப்பட்டாலும் கூட 2024 யில் தான் முழுவதுமாக சோலார் செயல்பாடுகளாக விரிவுபடுத்தப்பட்டு இருக்கிறது, இந்த விமான நிலையத்தில் செயல்பட்டு வரும் சோலார்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 2 இலட்சம் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறதாம்.
ஒரு விமான நிலையத்தை இயக்க தேவையான முழுமையான மின்சாரங்களும் இந்த விமான நிலையத்தில் செயல்படும் சோலார்களினாலே தயாரிக்கப்படுகிறது இதன் சிறப்பு, இதன் மூலம் கார்பன் வெளிப்பாடுகள் குறைக்கப்பட்டு பசுமை ஆற்றலை ஊக்குவிக்கப்படும், அந்த வகையில் உலகில் இருக்கும் மற்ற விமான நிலையங்களுக்கு கொச்சி பசுமை விமான நிலையம் சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறது.