Top 3 Electric Cars Under 5 Lakhs - பசுமை பைக்குகளை அடுத்து பசுமை கார்கள் என்பது தற்போது அனைவரின் ஆசையாக இருக்கிறது, அந்த வகையில் ரூ 5 இலட்சத்திற்குள் இந்தியாவில் வாங்க முடியும் அசத்தலான மூன்று எலக்ட்ரிக் கார்கள் குறித்து பார்க்கலாம்.
Top 3 Electric Cars Under 5 Lakhs - புகையில்லா பசுமை பைக்குகளை அடுத்து, அனைவரும் வாங்க துடிப்பது புகையில்லா பசுமை கார்கள் தான், அந்த வகையில் இந்தியாவில் கிடைக்க கூடிய ரூ 5 இலட்சத்திற்கும் குறைவான மூன்று எலக்ட்ரிக் கார்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
1. Strom Motors R3
மும்பையை மையமாக கொண்டு செயல்படும் ஸ்ட்ரோம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு தான் Strom Motors R3 வகை கார்கள், இரண்டு சீட்டர்கள், ஒரு சார்ஜ்க்கு 200 கி.மீ, மூன்று வீல்கள், பேட்டரி கெபாசிட்டி 30 kWh, ஒரு வேரியண்ட் கிட்ட தட்ட 11 கலர்களில் கிடைக்கிறது, பேட்டரிக்கு 1,00,000 கி.மீ வரையிலும் வாரண்டி கொடுக்கிறது, டாப் ஸ்பீட் 80 கி.மீ, பேட்டரி சார்ஜ் ஆக எடுத்துக் கொள்ளும் நேரம் 3 மணி நேரம், மொத்தத்தில் ஒரு அசத்தலான பக்காவான கார் தான்.
காரின் விலை: 4.5 இலட்சங்கள்
2) PMV EaS E
மும்பையை மையமாக கொண்டு செயல்படும் PMV எலக்ட்ரிக்கல் நிறுவனத்தின் தயாரிப்பு தான் PMV Eas E வகை கார்கள், இரண்டு சீட்டர்கள், ஒரு சார்ஜ்க்கு 160 கி.மீ, மூன்று வீல்கள், பேட்டரி கெபாசிட்டி 10 kWh, ஒரு வேரியண்ட் கிட்ட தட்ட 4 கலர்களில் கிடைக்கிறது, பேட்டரிக்கு 3 ஆண்டுகள் அல்லது 50,000 கி.மீ வரையிலும் வாரண்டி கொடுக்கிறது, டாப் ஸ்பீட் 70 கி.மீ, பேட்டரி சார்ஜ் ஆக எடுத்துக் கொள்ளும் நேரம் 3.20 மணி நேரம், மொத்தத்தில் இந்திய ட்ராபிக்குகளை எளிதாக எதிர்கொள்ளும் ஒரு அசத்தலான ஸ்மார்ட் கார் தான்.
காரின் விலை: 4.79 இலட்சங்கள்
3) Tata Nano EV
டாடா நிறுவனத்தின் பழைய நானோ கார்களை மையமாக கொண்டு எலக்ட்ரிக் கார்களை உருவாக்க டாடா திட்டமிட்டு இருக்கிறது, ஒரு சார்ஜ்க்கு 170 கி.மீ முதல் 220 கி.மீ வரை பயணிக்க கூடிய வகையில் மூன்று முதல் நான்கு வேரியண்ட்களை டாடா உருவாக்க திட்டமிட்டு இருக்கிறதாம், இந்த வகை கார்கள் 2025 யின் முதல் பாதியில் வெளியாகும் என டாடா அறிவித்து இருக்கிறது.
காரின் விலை: குறைந்த விலை 4 இலட்சங்கள், அதிகபட்ச விலை 7 இலட்சங்கள் வரையிலும் இருக்கலாம் என கூறப்படுகிறது.