Tamarind Planting And Marketing Ideas Tamil - புளியமரம் எப்படிப்பட்ட சூழலில் வளர்க்க வேண்டும், எப்படி வளர்க்க வேண்டும், எப்படி சந்தைப்படுத்த வேண்டும் என்பதை பார்க்கலாம்.
1) கொஞ்சம் அமிலத்தன்மையுள்ள நிலத்தில் தான் புளியமரம் என்பது நன்கு வளரும், உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் களிமண் போன்ற மண்பரப்பு.
2) ஒரு ஏக்கரில் கிட்ட தட்ட 40 முதல் 50 புளிய மரங்கள் வரை விளைவிக்க முடியும்.
3) ஒரு மரத்திற்கும் இன்னொரு மரத்திற்கும் இடையில் இடைவெளி அதிகம் இருப்பது மிக மிக அவசியம், அருகில் அருகில் வைக்கும் போது இரு மரத்தின் வேர்களும் பின்னி, மரத்திற்கு தேவையான நியூட்ரியண்ட்ஸ் கிடைக்காமல், புளி காய்த்தல் என்பது இரு மரத்திலும் குறைவாகும்.
4) ஒரு புளிய மரம் நன்கு வளர்ந்து புளியை தருவதற்கு குறைந்த பட்சம் 12 முதல் 15 வருடங்கள் ஆவது ஆகும்.
5) புளி காய்த்தல் ஆரம்பித்த பிறகு, அதில் இருந்து 60 வருடங்கள் வரையிலும் புளிய மரம், புளியை விளைச்சல் கம்மி ஆகாமல் விடாது தர வல்லது.
6) புளி காய்த்தல் நின்றாலும் கூட, புளிய மரம் அதற்கு பின்னும் கூட 150 வருடங்கள் வரை வாடாது வளரும்.
சரி, புளியை பற்றி பார்ப்போம்!
இந்தியாவிலேயே தமிழகம் தான் உணவுக்கான புளி உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது, குறிப்பாக சொல்ல வேண்டுமானால் மதுரை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகள் தான் தமிழகத்தில் புளி உற்பத்தியில் பெருமளவில் பங்கு கொள்கின்றன, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார் தோப்பு என்னும் ஒரு கிராமமே புளியந்தோப்பு கிராமம் என்று அழைக்கப்படும், அங்கு கிட்ட தட்ட ஒரு நான்கு கிலோ மீட்டருக்கு சாலையின் இருபுறமும் புளியந்தோப்புகள் சூழ்ந்து இருக்கும். இங்கு இருக்கும் ஒரு கோவிலில் ஒரு புளிய மரம் 5,000 ஆண்டுகளாக இன்னும் தளிர்த்து கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது.
சரி, புளியினால் என்ன இலாபம்?
நீங்கள் புளியமரம் வளர்ப்பதற்கு பெரிதாக சிரமப்பட தேவையில்லை, பெரிதாக பராமரிக்க தேவையில்லை, அதுவாகவே வளர்ந்து புளியைக் கொடுக்க ஆரம்பித்து விடும், ஒரு மரம் மட்டுமே கிட்டதட்ட ஒரு வருடத்திற்கு 180 கிலோ வரையிலும் புளியை தர வல்லது, மாதத்திற்கு ஒரு மரம் கிட்ட தட்ட 15 கிலோ வரையிலும் புளியைத் தரும், இந்த விளைச்சல் என்பது சீசனுக்கு ஏற்ப, பருவத்திற்கு ஏற்ப, அதிகரிக்கவும் செய்யலாம் குறையவும் செய்யலாம்.
உங்கள் நிலத்தில் ஒரு 50 மரம் இருக்கிறது என வைத்துக் கொள்வோம், ஒரு மரம் மாதத்திற்கு 15 கிலோ புளியைத் தருகிறது என வைத்துக் கொண்டால், மாதத்திற்கு 750 கிலோ புளியை உங்களால் சந்தைப் படுத்த முடியும், புளியின் விலை பருவத்திற்கு பருவம் மாறிக் கொண்டே இருக்கும், சராசரியாக 100 ரூபாய் என எடுத்துக் கொண்டால் கூட மாதத்திற்கு 75,000 ரூபாய் உங்கள் கைகளில் நிற்கும், பருவ காலங்களில் விளைச்சல் கூடும் போது இந்த வருமானம் இலட்சங்களில் கூட இருக்கும்.
" புளியை சந்தைப்படுத்துதல் என்பது புளி விளைச்சலில் முக்கிய பகுதியாகப் பார்க்கப்படுகிறது, நீங்கள் விளைவிக்கும் நிலத்தில் விற்பதைக் காட்டிலும், வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்தலில் ஈடுபடும் போது புளி வளர்ப்பில் இன்னும் அதிகமாக இலாபம் பார்க்க முடியும் "