Starlink Bursting Like Fire Ball - விண்வெளியில் சுற்றிக் கொண்டு இருக்கும் ஸ்டார்லிங் செயற்கை கோள்கள் அவ்வப்போது தொழில்நுட்ப கோளாறுகளால் வெடித்து சிதறுவதால் விண்வெளியில் அது ஒரு மிகப்பெரிய மாசை உருவாக்கும் என கூறப்படுகிறது.
ஸ்டார்லிங் என்பது பயனர்கள் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் ஒரு கம்பேக்ட் ஆன எங்கும் கொண்டு செல்லக்கூடிய வகையிலான ஒரு டிஸ்க்கை வைத்துக் கொண்டு, அதி ஸ்பீடான இணைய சேவையை எங்கு இருந்து கொண்டும் பெறும் வகையில், எலான் மஸ்க் அவர்களின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பம் ஆகும்,
பிரபல விண்வெளி அறிவியலார் ஜோனதன் மெக்டவல் என்பவர், விண்வெளியில் நடக்கும் ஒரு அசாதரண சூழலை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது, அதாவது ஒரு நாள் ஒன்றுக்கு விண்வெளியில் 4 முதல் 5 ஸ்டார்லிங் செயற்கைகோள்கள் செயலிழப்பதாகவும், அது விண்வெளியில் தீக்கோள் போல வெடிப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார்.
அது மட்டும் அல்லாமல் ஒரு ஸ்டார்லிங் செயற்கை கோள் வெடிக்கும் போது 30 கிலோ வரையில் அது அலுமினியம் ஆக்ஸைடை அது வெளியிடுமாம், இது இப்போது இந்த சூழலில் எந்த பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும் கூட எதிர்காலத்தில் விண்வெளி சூழலை இது மிகப்பெரிய அளவில் பாதிக்க கூடும் என்று விஎளி அறிவியலார்கள் கூறி வருகின்றனர்.
இது பூமியின் சுற்று வட்ட பாதைக்கு வருமா, நாளை விண்வெளியில் பறக்கும் வான்வெளியில் பறக்கும் ராக்கெட்டுகளுக்கும், விமானங்களுக்கும் இடையூறாக இருக்காதா என்றால் அதற்கான சாத்தியம் என்பது 26% என கூறப்படுகிறது, கடந்த ஜனவரியில் மட்டும் 120 ஸ்டார்லிங் செயற்கைகோள்கள் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது, இது தொடருமானால் மிகப்பெரிய வான்வெளி கழிவுகளை ஸ்டார்லிங் உருவாக்கும்.