QR Code Railway Pass Online -இரயில்வே நிர்வாகம் கியூஆர் கோடு ஸ்கேன் செய்து, பணம் செலுத்தும் முறையை அறிமுகம் செய்துள்ளது.
QR Code Railway Pass Online -இரயில் நிலையங்களில் பயணிகள் டிக்கெட் வாங்குவதற்கு நீண்ட வரிசையில் நின்று சிரமப்படுகிறார்கள், மேலும் டிக்கெட் கவுண்டரில் சில்லறை கொடுப்பதிலும் வாங்குவதிலும் காலதாமதம் ஏற்படுகிறது.இதனால் பயணிகள் வெகு சிரமத்திற்கு உள்ளாகுகிறார்கள். இதனைத் தவிர்க்கும் வகையில், தற்பொழுது தெற்கு இரயில்வே நிர்வாகம் கியூஆர் கோடு ஸ்கேன் செய்து, பணம் செலுத்தும் முறையை அறிமுகம் செய்துள்ளது.
இது, திருப்பூர், ஈரோடு,சேலம்,கரூர் உட்பட 78 இரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுன்டர்களில் "க்யூ ஆர் கோடு " பயன்படுத்தி டிக்கெட் வாங்கும், வசதி அறிமுகம் செய்துள்ளது.மேலும் இனி பயணிகள் தங்களின் கைபேசியை பயன்படுத்தி, பணம் செலுத்தி டிக்கெட்களை பெறுவதற்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது என்றும், இது பயணிகளின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.