US Corporates Planning To Take Over Tik Tok - தொடர்ந்து பல்வேறு நாடுகளில் Tik Tok சரிவை சந்தித்து வரும் நிலையில் ஒரு சில அமெரிக்க கார்பரேட் நிறுவனங்கள் Tik Tok யை கைப்பற்ற பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தெரிகிறது.
US Corporates Planning To Take Over Tik Tok - பிரபல சீன தொழில்நுட்ப நிறுவனம் ஆன Byte Dance கடந்த 2016 ஆம் ஆண்டு உலகளாவிய அளவில் ரிலீஸ் செய்யப்பட்டது, வெளியான சில மாதங்களிலேயே உலகெங்கும் கொடிகட்டி பறக்க துவங்கியது Tik Tok, இன்று சமூக வலைதளத்தில் பிரபலங்களாக இருக்கும் பலரும் Tik Tok மூலம் அறியப்பட்டவர்களே, இந்தியாவிலும் பல இணையதள பிரபலங்கள் Tik Tok வழி வந்தவர்கள் தான்.
அந்த வகையில் உலகளவில் அவ்வளவு பிரபலம் அடைந்த Tik Tok நிறுவனம் பயனர்களின் தரவுகளை அவர்களது பெர்மிசன் இல்லாமல் பதிவிறக்கம் செய்வதாக ஒரு தகவல் வெளியானது, உலகளவில் பல்வேறு நாடுகளின் பல்வேறு பயனர்கள் Tik Tok யை பயன்படுத்தி வந்ததால், பாதுகாப்பு கருதி பல நாடுகளில் Tik Tok செயலி முற்றிலுமாக தடை செய்யப்பட்டது,
இதனால் Byte Dance நிறுவனம் Tik Tok மீது செய்த முதலீடு கொஞ்சம் கொஞ்சமாக கரைந்தது, அதீத இலாபத்தை நோக்கி சென்ற நிறுவனம், அடுத்தடுத்து பல தடைகளை சந்தித்ததால் அப்படியே வீழ்ச்சியை நோக்கி சென்றது, அமெரிக்காவிலும் Tik Tok தடை செய்யப்பட்டதால், Tik Tok மீதி முதலீடு செய்த பல்வேறு அமெரிக்க முதலீட்டாளர்களும் சற்றே சரிவை சந்தித்தனர்,
இதனை தொடர்ந்து ட்ரம்ப் தலைமையிலான நிறுவனம் Tik Tok யை அமெரிக்க கார்பரேட் நிறுவனங்களான Oracle மற்றும் Microsoft யை கையகப்படுத்த அழைத்து இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது, ஆனாலும் சீன நிறுவனம் ஆன Byte Dance முழுவதுமாக நிறுவன செயல்பாடுகளில் இருந்து வெளியேறாது, அதே சமயத்தில் அனைத்து தரவு கட்டுப்பாடுகளும் அமெரிக்க கார்பரேட்டின் கையில் இருக்குமாம்.
" டீல் முடியும் பட்சத்தில் Tik Tok அமெரிக்க கார்பரேட் நிறுவனம் வசப்படும், மீண்டும் இந்தியாவில் Tik Tok துளிர் விட அது ஒரு வாய்ப்பாக அமையும் "