OnePlus 13 Launch Date In India - யப்பப்பா, என்னா Specifications, அப்படின்னு சொல்ற அளவுக்கு ஒன்பிளஸ்ல ஒரு மொபைல் வருது, அதும் சீக்கிரமே வருது, எப்ப வருது, அப்படி என்ன Specifications அப்படின்னு இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
OnePlus 13 Launch Date In India - 2013 யில் கார்ல் பெய், பீட் லே என்ற இருவரால் ஆரம்பிக்கப்பட்ட சீன நிறுவனமான One Plus உலகளாவிய அளவில் தங்களது மொபைல்களை சந்தைப்படுத்தி வருகிறது, வருடத்திற்கு வருடம் ஏதாவது வித்தியாசம் காட்டி கொண்டே இருப்பது ஒன் பிளஸ் நிறுவனத்தின் பலம், சமீபத்தில் சில வருடங்களாக ஒன் பிளஸ் OS யில் ஏற்பட்ட பிரச்சினைகளை களைந்து, தற்போது மீண்டும் புதிய பயணத்தில் புத்துணர்வுடன் புதிய மாடலுடன் களம் இறங்கி இருக்கிறது ஒன் பிளஸ் நிறுவனம்.
OnePlus 13 Complete Specifications
1) இயங்கு தளம்: Android 15 OxygenOS 15
2) திரை அளவு: 6.8 inches
3) ரிசொல்யூசன்: 1440 x 3168 pixels, 20:9 ratio
4) பாதுகாப்பிற்கான மெட்டீரியல்: Corning Gorilla Glass Victus
5) பின் கேமரா: மூன்று கேமராக்கள் 50 MP, f/1.6, (Wide Angle), 50 MP, f/2.6, (Telephoto), 50 MP, f/2.2, (Ultra Wide), AF
6) செல்பி கேமரா: 50 MP, f/2.4, (Wide Angle)
7) பேட்டரி: Li-PO, 6000 mAh, 120W Fast Charging, 65W Wireless Charging, 10W Reverse Charging
8) மெமோரி: 24GB RAM, 1TB Internal Memory
9) பிராசசர் & CPU: Qualcomm Snapdragon 8 Gen4 & Octa-core
" இந்தியாவில் OnePlus 13 விலை 65,000 ரூபாய் ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது, வருகின்ற அக்டோபர் 31 அன்று இந்தியாவில் OnePlus 13 அனைத்து ஷோரூம்களிலும், ஆன்லைன் சந்தைகளிலும் விற்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது "