Ola Electric Receiving 7000 Complaints Per Day - ஓலா எலக்ட்ரிக் வாகனங்கள் குறித்து, தினசரி 7,000 புகார்கள் அதிகாரப்பூர்வமாக பதிவாவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது, அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Ola Electric Receiving 7000 Complaints Per Day - பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் Ola Electric நிறுவனம் இந்தியாவின் முன்னனி எலக்ட்ரிக் பைக் தயாரிப்பாளராக விளங்கி வருகிறது, வேறு எந்த வாகனங்களிலும் இல்லாத புதுமை புதுமையான அம்சங்களை Ola மின்சார பைக்குகளில் கொண்டு வந்து விற்பனை பெருக்கி வந்தாலும், பைக்கிற்கு ஏதும் பிரச்சினை என்றால் சர்வீஸ் செய்வதில் ஆயிரம் குறைகளை வைத்து இருக்கிறது.
ஏதாவது ஒரு சிறிய பிரச்சினை என்றாலும் கூட அதை தீர்க்க முடியாமல் Ola Service சென்டர்கள் 20 முதல் 30 நாட்கள் வரை ஆக்குவதாக பலரும் முன்மொழிந்து வருகின்றனர், பல விளம்பரங்களை காட்டி விற்பனையை பெருக்கும் Ola, விற்பனைக்கு பின்னதான பிரச்சினைகளை கண்டு கொள்வதே இல்லை என்பது தான் Ola வாங்கியவர்களில் பலரது புகார்களாக இருக்கிறது.
ஒரு நாள் ஒன்றுக்கு மட்டும் 7,000 புகார்கள் அதிகாரப்பூர்வமாக தேசம் முழுக்க பதிவாகிறதாம், தலைமை ஆபிஸ் ஆன பெங்களுருவில் மட்டும் மாதத்திற்கு 80,000 புகார்கள் பதிவாகுவதாக தகவல், நுகர்வோர் குற்றவியல் சைட்களிலும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் எழுந்துள்ளதால் இந்திய அரசும் Ola பைக்குகளின் தரத்தை ஆய்வு செய்ய இருக்கிறது.
இந்த காலாண்டில் மட்டும் 495 கோடி நிகர இழப்பை சந்தித்து இருக்கும் Ola, இழப்பை ஈடு செய்ய 500 பேரை பணி நீக்கம் வேறு செய்ய இருக்கிறதாம், 3,733 பேர் பணி புரிந்து வரும் Ola நிறுவனத்தில் 500 பேரை பணி நீக்கம் செய்து விட்டால், ஏற்கனவே இருக்கும் சர்வீஸ் குறைபாடு, இன்னும் பல மடங்காக பெருகத் தான் செய்யும் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.