Netflix India News- தொடர்ந்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்திய விதிகளை மீறி வருவதாக, இந்திய அரசு கடுமையாக எச்சரித்து இருக்கிறது. பாலிசிகளை ஒழுங்கு படுத்தப்படாவிட்டால் கடுமையான நட்வடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது.
அமெரிக்காவின் பிரபல நிறுவனமான நெட்பிளிக்ஸ் தற்போது இந்தியாவில் ஒரு முன்னனி ஸ்ட்ரீமிங் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. பல பாலிவுட் பிராஜக்டுகளையும் தங்களது நிறுவனத்தின் கீழ் தயாரித்தும் வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் தான் இந்திய அரசிடம் இருந்து நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு ஒரு எச்சரிக்கை வந்து இருக்கிறது. அதாவது நெட்பிளிக்ஸ் நிறுவனம் முறையான இந்திய விதிகளை பயன்படுத்துவதில்லை, விசா முறைகேடு, வரி ஏய்ப்பு என பல அரசுக்கு எதிரான, சட்டங்களுக்கு உட்படாத செயல்களை செய்து வருவதாக இந்திய அரசு கூறி இருக்கிறது.
தொடர்ந்து அரசின் பாலிசிகளை மீறி வந்தால் இந்தியாவில் நெட்பிளிக்ஸ் மொத்தமாக முடக்கப்ப்டவும் வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர்.நெட்பிளிக்ஸ் மட்டும் அல்லாது நெட்பிளிக்ஸ் நிறுவனத்தை போல ஏனைய ஸ்ட்ரீமிங் நிறுவனங்களும் ஏதாவது அரசு பாலிசிகளை மீறி இருக்கிறதா என்ற கோணத்திலும் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது