Maligai Kadai Business Ideas Tamil - மளிகை கடை எப்படி வைப்பது, முதலீடு என்ன, இலாபம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
மளிகை கடை முதலீடு என்ன, எப்படி வைப்பது?
மளிகை கடையை பொறுத்தவரை ஒரு மீடியமான அளவில் நகரத்தில் வைக்க வேண்டும் எனில் குறைந்த பட்சம் ஒரு 5 முதல் 7 இலட்சம் ரூபாய் வரை கையில் இருக்க வேண்டும், உங்களது வீட்டில் இருக்கும் அத்தியாவசியங்களை எல்லாம் குறித்து வைத்துக் கொண்டு அதை அப்படியே கடையில் நிரப்ப வேண்டும் அவ்வளவு தான். வேறு ஏதும் பெரிதாக யோசிக்க தேவை இல்லை.
ஸ்டாக் ஏற்றுதல் மற்றும் கம்யூட்டர் பில் வைத்துக் கொண்டால் கூட்டம் அதிகமாக இருந்தால் பில் போடுவதற்கு இலகுவாக இருக்கும். கடையில் சரக்குகளை ஏற்றி அடுக்கி வைத்த பின்னரே கடையை திறந்தால் நன்றாக இருக்கும், கொஞ்சம் முன் அனுபவம் இருந்தால் இன்னும் பெட்டர், உங்கள் ஊரில் இருக்கும் டீலர்களை முழுவதுமாக தெரிந்து வைத்திருந்தல் அவசியம். இதுவே மளிகை கடை வைக்க போதுமானது.
சரி, லைசென்ஸ் ஏதும் எடுக்க வேண்டுமா?
ஆம் நிச்சயம் எடுக்க வேண்டும், நகராட்சி அல்லது பஞ்சாயத்துகளில் கடையை பதிவு செய்து ஆவணப்படுத்திக் கொள்ள வேண்டும், இது போக உணவு சம்பந்தப்பட்ட பொருள்கள், பண்டங்கள், மீன் சம்பந்தப்பட்ட பொருள்கள் நீங்களாக விற்றால் அதற்கு தமிழக அரசின் உணவு பாதுகாப்பு துறையிடம் முறையாக அனுமதி கோரி அதற்கும் ஒரு லைசென்ஸ் பெற்றுக் கொள்வது நல்லது.
சரி, இலாபம் எப்படி இருக்கும்?
இலாபத்தை பற்றி கவலை கொள்ள தேவையில்லை, ஒரு நாள் சம்பாத்தியத்தில் குறைந்த பட்சம் 40 சதவிகிதம் வரை இலாபம் இருக்கும், ஒரு நாள் ஒன்றுக்கு 10,000 ரூபாய்க்கு ஓடினால் அதில் 4,000 வரை இலாபம் மட்டும் கையில் இருக்கும். தினசரி 50,000 வரை சம்பாத்தியம் வரும் வகையில் ஓட்டுகிற மளிகை கடைகளும் இருக்க தான் செய்கின்றன. எல்லாம் உங்களது திறனை பொறுத்து தான்.
சரி, சூப்பர் மார்க்கெட், மால் இருக்கும் போது மளிகை கடைக்கு எப்படி வருவார்கள்?
என்ன தான் சூப்பர் மார்க்கெட், மால்கள் இருந்தாலும் மக்கள் மளிகை கடையையும் எதிர்பார்க்கிறார்கள், அதற்கு காரணம் நிறையவே இருக்கிறது, ஒருவர் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் சென்று பொருள்கள் வாங்குகிறார் என்றால் அவருக்கு அதிக பட்சமாக ஆகும் நேரம் என்பது 1 மணி நேரம் முதல் 1.30 மணி நேரம் வரை, அவர் தேவையுள்ளவைகளை 70 சதவிகிதம் வாங்கினால் தேவையில்லாதவற்றை 30 சதவிகிதம் வாங்குகிறார்கள்.
அதுவே ஒரு மாலுக்கு பொருள்களை வாங்க சென்றால் 3 முதல் 4 மணி நேரம் வரை செலவிடுகிறார்கள், தேவையுள்ள பொருட்களை 40 சதவிகிதம் வாங்கினால் தேவையில்லாதவற்றை 60 சதவிகிதம் வாங்குகிறார்கள், அதுவே ஒரு மளிகை கடையில் அவர்கள் செலவிடும் நேரம் 15 நிமிடம், 100 சதவிகிதம் தேவையுள்ளனவற்றை மற்றும் பில் எழுதி வாங்குகிறார்கள், இதனால் நேரமும், பணமும் மிச்சப்படுகிறது, இதனால் தான் மளிகை கடையின் தேவை இன்னமும் இருக்கிறது.