• India

மாதம் 2 இலட்சம் இலாபம் வேண்டுமா..அப்படின்னா சிக்கன் கடை வைங்க..!

Chicken Shop Business Ideas Tamil

By Ramesh

Published on:  2024-10-17 02:01:19  |    1967

Chicken Shop Business Ideas Tamil - தற்போதெல்லாம் வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை சிக்கன் எடுக்காத வீடுகளே இல்லை என்று சொல்லலாம், அந்த அளவிற்கு சிக்கன் என்பது மக்களுடன் ஒன்றிய உணவாக பார்க்கப்படுகிறது. வீட்டில் மட்டும் அல்லாது பெரும்பாலான ஹோட்டல்களிலும் மட்டனைக் காட்டிலும் சிக்கனின் ஆதிக்கமே அதிகமாக இருக்கிறது, அத்தகைய சிக்கனை இலாபகரமான முறையில் கடைகளில் எப்படி விற்பது என்பது குறித்து பார்ப்போம்.

சரி, ஒரு சிக்கன் கடை வைக்க முதலீடு என்ன?

வெட்டுவதற்கான மரத்தட்டு, சிக்கனை தொங்க விடும் கொக்கிகள், கூர் கத்திகள், தோல் உரிக்கும் மெசின்கள், கடைக்கான போர்டுகள், டேபிள்கள், கடை அலங்காரம், மாநகராட்சி லைசென்ஸ், உணவு பாதுகாப்பு துறை லைசென்ஸ் என எல்லாம் சேர்த்து ஒட்டு மொத்தமாக ஒரு மூன்று இலட்சம் வரை கையில் இருப்பது அவசியம், இது போக முதல் சிக்கன் முதலீட்டிற்கு ஒரு 60,000 கையிலும் வைத்துக் கொள்வது நல்லது.


சரி, சிக்கனை மொத்தமாக கொள்முதல் செய்வது எப்படி?

பொதுவாக சிக்கனுக்கென்று மொத்த டீலர்கள் இருப்பார்கள், உங்கள் ஊரில் இருக்கும் சிக்கன் கடைகளுக்கு காலையிலேயே ஒரு கூண்டு வண்டியில் வந்து டெலிவரி செய்வார்கள், அவர்களை பிடித்தால் நம்பர் கிடைக்கும், பொதுவாக உயிருடன் சிக்கன் 20 கிலோ பாக்ஸ்களாக வரும், உங்கள் கடையின் ஓட்டத்தை பொறுத்து உங்களுக்கு எத்துனை பாக்ஸ் தேவையோ வாங்கி கொள்ளலாம்.

உதாரணத்திற்கு ஒரு நகரத்தின் மையத்தில் இருக்கும் ஒரு கடையை எடுத்துக் கொள்ளலாம், சாதாரண நாட்களில், ஹோட்டல், வீடுகள் சேர்த்து ஒரு 50 கிலோ வரையிலும் சிக்கன் ஓடும். ஞாயிற்றுக் கிழமை என்னும் போது அது அப்படியே டபுள் ஆகும், 100 கிலோ வரையிலும் ஓடும். அப்படி என்றால் உங்களுக்கு ஒரு வாரத்திற்கு 400 கிலோ சிக்கன் தேவைப்படும், அதாவது 20 பாக்ஸ் சிக்கன் தேவைப்படும்.



சரி, இலாபம் எப்படி இருக்கும்?

பொதுவாக உயிருடன் கோழி மொத்த விலையாக உங்களுக்கு ஒரு கிலோ 110 ரூபாய்க்கு வரும், சில இடங்களில் 100 ரூபாய்க்கும் கிடைக்கிறது. வெட்டும் போது உருவாகும் கழிவுகள் எல்லாம் சேர்த்து நமக்கு வரும் அசல் விலை ஒரு 130 ரூபாய் என வைத்துக் கொள்வோம். இன்று ஒரு கிலோ உறித்த சிக்கனின் விலை மார்க்கெட்டில் 270 ரூபாயாக இருக்கிறது. அப்படி என்றால் ஒரு கிலோவிற்கு 140 ரூபாய் இலாபம் இருக்கிறது.

ஓரு நாளுக்கு 50 கிலோ விற்பனை என்றால் நாள் ஒன்றிற்கே உங்கள் கையில் 7000 ரூபாய் இலாபம் நிற்கும்.

அப்படி என்றால் வார நாட்களான 6 நாட்களுக்கு 42.000 ரூபாய் இலாபம், ஞாயிற்றுக்கிழமை ஒரு 14,000 ரூபாய் இலாபம், ஒரு வாரத்திற்கான தனி இலாபம் மட்டும் 56,000 ரூபாய், ஒரு மாதத்திற்கு 4 வாரம் என வைத்துக் கொண்டால், மாதத்திற்கு இலாபம் மட்டும் 2,24,000 ரூபாய் உங்கள் கைகளில் நிற்கும், இதில் ஊழியர்கள் சம்பளம், இதர செலவுகள் என 24,000 கழித்தால் கூட உங்கள் கைகளில் இலாபமாக நிச்சயம் இரண்டு இலட்சம் நிற்கும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.