Central Government Loan Schemes -மத்திய அரசால், 2020 ஆம் ஆண்டு கொரோனா கால கட்டத்தில் வெளியான இந்த திட்டம் ஆண்களுக்கான திட்டம் இல்லை.இது முழுமையாக பெண்களுக்காக மட்டுமே கொண்டு வந்த சிறப்பான திட்டம் ஆகும். மத்திய அரசால் வெளியிடப்பட்ட திட்டத்தின் பெயர் " உத்தியோகினி ".
இந்த உத்தியோகினி திட்டம் கொரோனா கால கட்டத்தில் வெளியானதால், இதைப் பற்றி ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது.எனவே, இந்த திட்டத்தைப் பற்றி பலரும் அறியாமல் தான் இருக்கிறார்கள்.
மேலும், இந்த உத்தியோகினி திட்டம் இன்றும் நடைமுறையில் தான் இருக்கிறது.
உத்தியோகினி திட்டம் என்பது, அனைத்து பெண்களுக்கும் கிடைக்கும் திட்டம் இல்லை. இந்த திட்டம் புதிதாக தொழில் துவங்கும் பெண்களுக்கும் அல்லது ஏற்கனவே துவங்கிய தொழிலை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கும் பயன்படும் வகையில் கொண்டு வரப்பட்டது.
இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 3 லட்சம் வரை கடன் உதவி பெற்றுக்கொள்ளலாம், மேலும் 0 % வட்டியுடனும் மற்றும் 50% மானியமும் கிடைக்கும்.
0% வட்டி விகிதம் என்பது அனைத்து விதமான பெண்களுக்கும் கிடைப்பதில்லை. அது, இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
வட்டி:
எஸ் சி (SC) ,எஸ் டி(ST) , உடல் ஊனமுற்றவர் (PHYSICALLY HANDICAP) - இவர்களுக்கு மட்டுமே 0% வட்டி விகிதம் கிடைக்கும்.
பொது பெண்கள் (GENERAL WOMEN) - இவர்களுக்கு 10% முதல் 15% வரை வட்டி விகிதம் கிடைக்கும்.
மேலும், இந்தத் திட்டத்தில் 50% மானியம் என்பது அனைத்து விதமான பெண்களுக்கும் கிடைப்பதில்லை. இந்த மானியம் இரண்டு பிரிவுகளின் அடிப்படையில் உள்ள பெண்களுக்கு மட்டும் தான் கொடுக்கப்படுகிறது.அதாவது,
விதவை மற்றும் ஊனமுற்றோர் (WIDOWED AND HANDICAPPED) இவர்களுக்கு 30% மானியம் கொடுக்கப்படுகிறது.
எஸ் சி (SC) ,எஸ் டி(ST) இவர்களுக்கு மட்டுமே 50% வரை மானியம் கொடுக்கப்படுகிறது.
50% மானியம் என்பது,
எடுத்துக்காட்டாக - 3 லட்சம் வாங்கினால் அதில் பாதி, அதாவது 1.5 லட்சம் செலுத்தினால் மட்டுமே போதும், மீதம்முள்ள 1.5 லட்சத்தை வங்கியில் இருந்து செலுத்திவிடுவார்கள்.
உத்தியோகினி திட்டம் என்பது எங்கு கிடைக்கும் என்று பலருக்கும் தெரியாது. மேலும் அதை பெறுவதற்கு என்ன என்ன வழிமுறைகள் இருக்கிறது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
1. இந்த திட்டம் அனைத்து விதமான வங்கிகளிலும் பெற்றுக்கொள்ளலாம்.மேலும்,
2. இதற்கு வயது வரம்பு என்பது கட்டாயமான ஒன்று. அதாவது இத்திட்டத்தை பெற விரும்பும் பெண்களின் வயது 25 முதல் 55 வரை இருக்கவேண்டும்
3. சிபில் ஸ்கோர் சரியாக இருக்க வேண்டும்.
4. குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
5.EDP( ENTREPRENEURSHIP DEVELOPMENT PROGRAMME ) என்பது அரசாங்கத்தினைச் சார்ந்து பயிற்சி அளிக்கப்படும். அதாவது, 3 முதல் 6 நாட்கள் வரை நடைபெறும் ,இதில் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும். இந்த EDP ல் பங்கேற்று சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும்.
வங்கிக்கு சென்று தான் ஆரம்பிக்க போகும் தொழிலை பற்றி தெளிவாக மேலாளருக்கு புரியும் படி எடுத்து சொல்லி, APROVAL வாங்க வேண்டும்.
2 போட்டோஸ்
ஆதார்கார்ட்
ரேஷன்க்கார்ட்
பிறப்புச் சான்றிதழ்
வருமான வரி சான்றிதழ்
பேங்க் பாஸ் புக்
EDP சான்றிதழ்
வங்கியின் மேலாளர் இந்த documents அனைத்தையும் சரி பார்த்த பிறகு லோன் கொடுக்கப்படும்