• India

பைக் ஷோரூம் வைக்கனும்னு ஆசையா...இதோ உங்களுக்கான பிசினஸ் மாடல்...!

Bike Showroom Business Ideas

By Ramesh

Published on:  2024-10-20 09:28:20  |    1676

Bike Showroom Business Ideas - எல்லாருக்குமே ஒரு பைக் ஷோரூம் பாக்குறப்போ ஒரு ஆசை வரும், நம்மளும் இப்படி வைக்கலாமா அப்படின்னு, ஆனா எப்படிங்கிற ஒரு கேள்வி நம்மள தடுக்கும், இங்க உங்க கேள்விக்கான விடைகள் கிடைக்கும். ஒரு ஷோரூம் வைக்கிறதுக்கு ஒரு குறிப்பிடத்தக்க முதலீடு, ஒரு நல்ல பிசினஸ் மாடல், ஒரு நல்ல இடம் இவ்வளது தான் உங்களுக்கான தேவை. எல்லாம் இருக்கும் பட்சத்தில் ஒரு பெட்டரான நல்ல இலாபம் தரக்கூடிய ஷோரூம் ரெடி.

சரி, எப்படி வைக்க வேண்டும், முதலீடு என்ன?

பொதுவா ஷோரூம் ரெண்டு விதமா வைக்கலாம் மெயின் டீலர் மற்றும் சப் டீலர், உதாரணமா எடுத்துக்கனும்னா நெல்லை டிவிஎஸ்னு திருநெல்வேலில ஒரு ஷோரூம் இருக்கும், அவங்க மெயின் டீலர் ஷிப் எடுத்திருக்காங்க, அவங்களுக்கு கீழ திருநெல்வேலி, தூத்துக்குடில ஒரு 5 சப் டீலர்ஸ் இருக்காங்க, நீங்க மெயின் டீலர்ஷிப் எடுக்கனும்னா நேரடியா கம்பெனிய அணுகனும், சப் டீலர்ஷிப் வைக்கனும்னா, மெயின் டீலர்ஷிப் எடுத்திருங்கிறவங்கள அணுகலாம், அப்படி இல்லன்னா கம்பெனியையும் அணுகலாம்.


பைக்கையும் நிறுவனங்களையும் தேர்ந்து எடுப்பதில் முக்கிய கவனம் கொள்ள வேண்டும், எந்த பைக்குகள் எந்த நிறுவனங்கள் வருடத்திற்கு அதிக பைக்குகளை விற்கின்றனர் என்பதை அறிந்து கொண்டு தேர்வு செய்யலாம், உதாரணத்திற்கு இந்தியாவை எடுத்துக் கொண்டால் வருடத்திற்கு அதிக பைக்குகளை விற்கும் இரண்டு நிறுவனங்கள் என்றால் அது ஹீரோ மற்றும் டிவிஎஸ் நிறுவனங்கள் தான், மற்ற கம்பெனிகளையும் தேர்ந்து எடுக்கலாம், ஆனால் இது தான் உங்கள் முதல் ஸ்டார்ட் அப் என்றால் ரிஸ்க் வேண்டாம்.

நீங்கள் மெயின் டீலர் ஷிப் கோருகிறீர்கள் என்றால், சொந்தமான இடம் வேண்டும், குறைந்த பட்சம் 5000 சதுர அடி முதல் 6000 சதுர அடி வரை இருக்க வேண்டும், இடம், கட்டுமானம், ஹார்டுவேர்ஸ், டூல்ஸ், அமைப்புகள், டீலர்ஷிப்கான டெபாசிட், ஒரு 100 பைக்குகளை இறக்குவதற்கான செலவு என எல்லாம் சேர்த்து ஒரு 2.5 கோடி முதல் 3 கோடி வரை ஆகலாம், நீங்க சப் டீலர் ஷிப் கோருகிறீர்கள் என்றால், வாடகை அல்லது லீஸ் இடம் கூடம் போதும், குறைந்தபட்சம் 2500 சதுர அடி வரை இருக்க வேண்டும்.



ஒப்பந்தம், கட்டுமானம், ஹார்டுவேர்ஸ், டூல்ஸ், அமைப்புகள், டீலர்ஷிப்கான டெபாசிட், முதல் ஒரு 50 பைக்குகளை இறக்குவதற்கான செலவு என எல்லாம் சேர்த்து ஒரு 1 கோடி முதல் 1.30 கோடி வரை ஆகலாம், ஒரு மெயின் டீலர்ஷிப்பின் கீழ் சப் டீலர்ஷிப் எடுக்கும் போது பில்லிங்கிற்கு எல்லாம் நீங்கள் அவர்களை சார்ந்து இருக்க வேண்டும், பைக்குகளையும் அவர்களிடம் இருந்து மட்டும் தான் கொள்முதல் செய்ய முடியும்.

சரி, இலாபம் எப்படி இருக்கும்?

மெயின் டீலர் ஷிப்பை பொறுத்த வரை ஒரு பைக்கிற்கு 4,500 முதல் 6,000 வரை இலாபம் இருக்கும், வங்கி கடன் மூலம் நீங்கள் வண்டி எடுத்துக் கொடுக்கும் போது அதற்கு கமிஷனாக ஒரு 5,000 வரை கிடைக்கும், சர்வீஸ் மற்றும் பார்ட்ஸ்களுக்கு ஒரு 25 சதவிகிதம் வரை இலாபம் இருக்கும், மாதத்திற்கு ஒரு 100 வண்டிகள் விற்பனைக்கு உள்ளாகிறது, ஒரு 400 வண்டிகள் சர்வீஸ்களுக்கு உள்ளாகிறது எனில் குறைந்த பட்சம் ஒரு 8 முதல் 10 இலட்சம் வரை வருமானம் உண்டாகும். ஒரு 4 இலட்சம் செலவீனம் என்றாலும் கூட 4 முதல் 6 இலட்சம் வரை இலாபமாக கையில் நிற்கும். சப் டீலர் என்னும் போது இந்த இலாபத்தை பாதி ஆக்கிக் கொள்ளுங்கள் மற்றபடி பிராசஸ் எல்லாமே அதே தான்.