Success Story Of Zoho - சென்னையில் ஒரு சிறிய அபார்ட்மெண்டில் ஆரம்பிக்கப்பட்ட Zoho நிறுவனம், எப்படி சர்வதேச நிறுவனமாக அபரித வளர்ச்சி அடைந்தது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Success Story Of Zoho - இன்று எல்லோருக்கும் Zoho என்றால் ஸ்ரீதர் வேம்பு என்பது மட்டும் தான் தெரியும், ஆனால் உண்மையில் Zoho ஸ்ரீதர் வேம்புவால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம் அல்ல, அவரது சகோதரர்கள் ஆன குமார் வேம்பு மற்றும் சேகர் வேம்பு இருவரும் டோனி தாமஸ் உடன் இணைந்து 1996 ஆம் ஆண்டு அட்வென்ட்நெட் (AdventNet) என்ற பெயரில் ஒரு குட்டி நிறுவனமாக தான் ஆரம்பித்தனர்.
அந்த சமயத்தில் டோனி தாமஸ் அவரது அமெரிக்க நிறுவனத்தை நடத்திக் கொண்டு இருந்தார், குமார் வேம்பு மற்றும் சேகர் வேம்பு சென்னையில் இருந்து கொண்டு ஒரு அபார்ட்மெண்டில் அறை எடுத்து அங்கு இருந்து நிறுவனத்தை இயக்கி கொண்டு, குட்டி குட்டி பிராஜக்டுகளை கையாண்டு வந்தனர், ஆரம்பத்தில் ஸ்ரீதர் வேம்பு இந்த நிறுவனத்துடன் சுத்தமாக தொடர்பில் இல்லை.
1997 ஆம் ஆண்டு லாஸ் வேகஸ்சில் நடைபெற்ற ஒரு வர்த்தக மாநாட்டில் ஸ்ரீதர் வேம்புவும், டோனி தாமஸ்சும் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது, அங்கு டோனி தாமஸ், 'சேல்ஸ் பிரிவிற்கு ஏதும் ஆள் இருந்தால் சொல்லுங்கள்' என்று ஸ்ரீதர் வேம்புவிடம் ஒரு கோரிக்கையாக கேட்டு இருக்கிறார், அதற்கு 'நானே எடுத்து செய்கிறேன்' என ஸ்ரீதர் வேம்பு சொன்ன பதில் தான் இன்று Zoho என்னும் சர்வதேச நிறுவனம் அமைய உந்துதலாக அமைந்தது.
ஸ்ரீதர் வேம்பு செய்த ஒரு சில முயற்சிகள் நிறுவனத்திற்கு பலம் கொடுக்கவே நிறைய ப்ராஜக்டுகள் நிறுவனத்திற்கு வர ஆரம்பித்தன, முதலில் அமெரிக்க நிறுவனத்தை கவனித்து வந்த ஸ்ரீதர் வேம்பு, பின்னர் ஒரு கட்டத்திற்கு பின்னர் இந்திய நிறுவனத்தை கையில் எடுத்தார், இலாபங்கள் அனைத்தையும் நிறுவனத்தை வடிவமைப்பதற்கு மட்டுமே முதலீடு செய்தார்.
" கொஞ்சம் கொஞ்சமாக வெளிநாட்டு நிறுவனங்களை எல்லாம் ஈர்த்து முதலீடுகளை பெருக்கினார், இன்று ஸ்ரீதர் வேம்புவின் சகோதரர்கள் உருவாக்கிய AdventNet நிறுவனம், Zoho என்னும் சர்வதேச நிறுவனமாக வளர்ந்து இருக்கிறது என்றால் அதற்கு ஸ்ரீதர் வேம்புவின் பங்கு அளப்பரியது "