The Inspiring Success Story of Nalli Silks - பட்டுகளின் சாம்ராஜ்யமாக செயல்பட்டு வரும் நல்லி சில்க்ஸ்சின் வெற்றி ரகசியம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நல்லி சில்க்ஸ்சின் ஆரம்ப காலக்கட்டம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமானால் கிட்டத்தட்ட 18 ஆம் நூற்றாண்டில் கடைசி காலக்கட்டத்திற்கு செல்ல வேண்டும், நெசவு தொழிலை மையமாக கொண்ட நல்லி சின்னசாமி செட்டியார் காஞ்சிபுரத்தில் முதன் முறையாக பட்டுப்புடவைகளை விற்க ஆரம்பிக்கிறார், தரத்தில் குறைவில்லாத அவரது பட்டுகளுக்கு அப்போதே வரவேற்பு அதிகமாக இருந்தது.
அப்போது வாழ்ந்து வந்த சிறுகுறு நில மன்னர்கள் எல்லாம் இவரது பட்டுகளை அரசிகளுக்கு வாங்கி செல்வார்களாம், அந்த அளவிற்கு சின்னசாமி செட்டியார் அவர்களின் பட்டுக்கு மவுசு இருந்தது, 1911 ஆம் ஆண்டு ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு அணியப்பட்ட பட்டு சால்வை அது நல்லி சில்க்ஸ் குடும்பத்தினரால் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் 1928 ஆம் ஆண்டு சென்னையில் ஒரு பட்டு சாம்ராஜ்யத்தை துவங்குகிறார்கள், அது தான் இவர்களின் மிகப்பெரிய வித்து, பொதுவாக இந்த பட்டு குடும்பத்தின் ஆரம்ப கால வாழ்க்கை ஆந்திராவில் நல்லி என்ற கிராமத்தில் இருந்ததாக கூறப்படுகிறது, நாளடைவில் அது இவர்களின் பெயருக்கு பின்னாலும் தொடர, அது இவர்களின் தொழிலின் அடையாளமாகவும் மாறியது.
சின்னசாமியில் ஆரம்பித்து நல்லி குப்புசாமி என இன்று 5 ஆவது தலைமுறையாக நல்லி சில்க்ஸ் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது, இவர்களது விளம்பரத்தில் எப்போதுமே தள்ளுபடிகள் இருந்ததில்லை, தரத்தில் நிறைவாக கொடுப்பது மட்டுமே இவர்களது கொள்கை, அந்த கொள்கை தான் இவர்களை 5 தலைமுறையாக பட்டு சாம்ராஜ்யத்தை நிலை கொண்டு இருக்க செய்கிறது.
" இன்று இந்தியாவில் மட்டும் அல்லாமல் அமெரிக்கா, சிங்கப்பூர், கனடா உள்ளிட்ட நாடுகளிலும் நல்லி சில்க்ஸ் செயல்பட்டு வருகிறது, இன்று 30 க்கும் மேற்பட்ட கிளைகள் செயல்பட்டு வருகிறது, தரம் இருந்தால் வெற்றி நிலைகொண்டு இருக்கும் என்பதற்கு நல்லி சில்க்ஸ் சிறந்த சான்றாக அமைகிறது "