Gokul Santol History - கும்பகோணத்தில் திட்டை என்னும் பகுதியை சேர்ந்தவர் தான் இந்த ராஜகோபாலன், இவர் திட்டை ஸ்ரீனிவாசன் ராஜகோபாலன் என்றும் TSR என்றும் அழைக்கப்படுகிறார், ஒரு விவசாய பின்புலம் கொண்டவர், ஆனால் ராஜகோபாலன் அவர்களுக்கோ விவசாயத்தை தாண்டி எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்திருக்கிறது.
அதே திட்டை பகுதியில் சிறிய குடிசைத் தொழில் ஆக நறுமணப்பொருட்கள், பத்தி, சந்தனம், குங்குமாம், வாசனை திரவியங்கள் மற்றும் இன்னும் இதர பூஜைப் பொருட்களை தயார் செய்து சந்தைப்படுத்தி வந்தார், நல்ல தரமான பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்தி வந்ததால், வாடிக்கையாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகம் ஆகினர்.
பின்னர் திட்டை ஸ்ரீனிவாசன் ராஜகோபாலன் & கம்பெனி என்ற ஒரு முழு நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டது, இவர் அந்த காலத்திலேயே தனது நிறுவனத்திற்கு என்று தனி லாகோ வைத்து இருந்தார். இவர்கள் தயாரிக்கும் அனைத்து பொருள்களிலும் ஒரு குழந்தை கிருஷ்ணா லாகோ இருக்கும், அதே லாகோ தான் இன்று வரை பயன்படுத்தியும் வருகின்றனர்.
தொடர்ந்து நிறுவனத்தின் தரம் மங்காமல் தலைமுறை தலைமுறையாக நிறுவனத்தை வழி நடத்தி வருகின்றனர், பொதுவாக தேசம் முழுக்க செயல்பட்டு வந்த இவர்கள் நிறுவனம் சர்வதேச அளவில் சென்றதற்கு காரணம், T R கண்ணன் அவர்கள் தான், அவரின் மூலம் தயாரிக்கப்பட்ட கோகுல் சாண்டோல் பவுடர் இன்று சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவில் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது.
" அன்று ஆயிரங்களில் வருமானம் பார்த்து வந்த கோகுல் சாண்டோல் இன்று கோடிகளில் வருமானம் பார்க்கிறது என்றால் அதற்கு காரணம் தலைமுறைகள் பல கடந்தாலும் தரத்தில் அவர்கல் எப்போதும் குறை வைத்தது இல்லை "