• India
```

பசலைக் கீரை வளர்ப்பு...வெறும் 50 ரூபாய் முதலீடு செய்தால்...மாதம் ரூ 15000 வரை வருமானம்...!

Spinach Planting Ideas Tamil

By Ramesh

Published on:  2025-01-27 08:25:20  |    154

Spinach Planting Ideas - பசலைக் கீரை வளர்ப்பதன் மூலம் எப்படி ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் பார்ப்பது எப்படி என்று பார்க்கலாம்.

Spinach Planting Ideas - பசலைக்கீரை வளர்க்கலாம், சரி அதை ஏன் வளர்க்க வேண்டும், சந்தைகளில் நல்ல மதிப்பு இருக்குமா என்ற கேள்வி எல்லாம் உங்களுக்கு எழும், என்ன தான் காலம் நவீனம் ஆனாலும் மக்கள் உடல் நலம் என்ற கருத்தில் மட்டும் பின்னாளை திரும்பி பார்த்து வருகின்றனர், அந்த வகையில் பசலைக்கீரைக்கும் சந்தையில் சிறந்ததொரு மார்க்கெட் இருக்கிறது.

சரி ஏன் பசலைக்கீரைக்கு மார்க்கெட் இருக்கிறது என்றால், பொதுவாக இரத்தத்தில் ஹீமோகுளோபின் கம்மியாக இருப்பவர்களுக்கு உலர்ந்த கருப்பு திராட்சை அல்லது ஆட்டின் சுவரொட்டியை சாப்பிட சொல்வார்கள், ஆனால் அதை எல்லாம் விட மிக சத்து மிக்கதும்,உடனடியாக ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்யும் சத்துக்களும் பசலைக் கீரையில் இருப்பதாக சொல்கின்றனர்.



அதனால் தான் பசலைக்கீரைக்கு சந்தையில் தனி மதிப்பு இருக்கிறது,பொதுவாக உங்கள் வீடுகளில் தோட்டத்திற்கு இடம் இருந்தால் தோட்டத்தில் விதை இடலாம், தோட்டம் இல்லை எனி மாடிகளில் ரேக்குகளும், தொட்டிகளும் அமைத்து அதில் விதைக்கலாம், பயிரிட்ட 40 முதல் 50 நாட்களில் முதல் அறுவடையை துவங்கலாம், உரத்திற்கு காய்கறி கழிவுகளை பயன்படுத்தலாம்.

கீரை மேல் பூச்சி அடித்தால் இஞ்சி, மிளகு, மிளகாய் கலந்த இயற்கை பாசன கலவையை தெளிக்கலாம், ஒரு பசலைக் கீரை கட்டு ரூ 25 முதல் 30 வரை விற்கப்படுகிறது, நாள் ஒன்றுக்கு 15 முதல் 20 கீரைக்கட்டுகள் சந்தைப்படுத்தினால் கூட மாதம் சராசரியாக ரூ 15,000 வரை வருமானம் பார்க்கலாம், வெறும் 50 ரூபாய் விதைக்கு முதலீடு செய்தால் மாதம் 15,000 சம்பாதிக்க முடியுதுனா இப்பவே ஸ்டார் பண்ணலாமே.