Moving Kayilan Kadai Ideas - நகரும் காயிலாங்கடை அமைத்து எவ்வாறு ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் பார்ப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பொதுவாக காயிலாங்கடை என்பது தேவையில்லாத வீட்டு பொருட்கள், உடைந்த பொருள்கள், ரிப்பேர் ஆன மின் சாதனங்கள், தேவையில்லாத புக்குகள், அட்டைகள், இரும்புகள் மற்றும் பழைய பண்ட பாத்திரங்களை வாங்கும் ஒரு நிறுவனம் ஆகும், ஆனால் இதில் இருக்கும் ஒரு பிரச்சினை பெரிய பொருள்களை மக்களால் சுமந்து கொண்டு வந்து கடைகளில் போட முடியாது.
அதாவது ஏதாவது ப்ரிட்ஜ், கிரைண்டர், வாசிங் மெசின் என்பவைகள் ரிப்பேர் செய்ய முடியாமல் வீட்டில் இடத்தை அடைத்துக் கொண்டு இருக்கும், வீட்டார்களால் அதை தூக்கி கொண்டு காயிலாங் கடையில் போட முடியாத சூழல் இருக்கும், அந்த வகையில் ஒரு நகரும் காயிலாங் கடை இருந்தால் அவர்களே வீட்டில் இருந்தபடியே இந்த பழைய பொருள்களை கழித்துக் கொள்ள முடியும்.
சரி இந்த நகரும் காயிலாங்கடைக்கு முதலில் உங்களிடம் ஏதாவது வாகனம் அல்லது ஒரு பெரிய தள்ளுவண்டி இருப்பது அவசியம், வண்டியை எடுத்துக் கொண்டு காலை முதல் மாலை வரை வீடு வீடாக, தெரு தெருவாக, ஊர் ஊராக சென்று வீட்டார்களுக்கு தேவையில்லாத பொருள்களை முதலில் கொள்முதல் செய்ய வேண்டும், பழைய பொருட்களில் சந்தை மதிப்பை இதற்கு முன்னதாக தெரிந்து இருப்பது அவசியம்.
பின்னர் அன்றைய தினம் கொள்முதல் செய்த பழைய பொருள்களை அன்றைய தினமே தரம் பிரித்து, உடைத்தல், காயில் எடுத்தல் போன்ற வேலைகளை அன்றே செய்து முடித்திடல் வேண்டும், உதாரணத்திற்கு ஒரு வாஷிங் மெசின் வந்தால் அதில் மோட்டாரை பிரித்து காயிலை தனியாக எடுத்து, பிளாஸ்டிக், இரும்பு, கழிவு என தனித்தனியாக பிரிக்க வேண்டும்.
" பேட்டரிகள், காயில்கள், இரும்பு, பெட் பாட்டில்கள், பித்தளை, அலுமினியம் பொருட்கள் என அனைத்தையும் கொள்முதல் செய்தால் அதற்கு நல்ல மதிப்பு இருக்கும், தினசரி வண்டி எடுத்து ஒரு ஐந்து, ஆறு தெருக்கள் சுற்றினால் கூட தினசரி ரூ 5000 வரை வருமானம் பார்க்கலாம் "