• India
```

கிட்ஸ்களுக்கான டம்மி ரூபாய் தயாரிப்பு...சிறிய முதலீட்டில்...மாதம் ரூ 20000 வரை வருமானம் பார்க்கலாம்...!

Kids Dummy Rupee Making

By Ramesh

Published on:  2025-02-13 23:49:35  |    42

Kids Dummy Rupee Making - குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான டம்மி ரூபாய் நோட்டுகள் தயாரிப்பில் ஈடுபட்டு ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் எப்படி பார்ப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

குழந்தைகள் என்றாலே முதலில் நியாபகம் வருவது விளையாட்டு தனமும் சுட்டி தனமும் தான், எதையாவது ஒரு விளையாட்டு பொருளை வைத்துக் கொண்டு விநோதமாக ஏதாவது ஒரு விளையாட்டை விளையாடிக் கொண்டே இருப்பார்கள், அந்த வகையில் குழந்தைகள் விளையாடும் விளையாட்டு பொருள்களுள் இந்த டம்மி ரூபாய் நோட்டுகள் மிக மிக முக்கியமானது.

இந்த டம்மி ரூபாய் நோட்டுகள் தயாரிப்பது என்பது மிக மிக எளிதான முறை தான், இணையங்களில் இந்த குழந்தைகளுக்கான டம்மி நோட்டுகளுக்கான இமேஜ் கிடைக்கும், அதை ஒரு பிரிண்டர் வாங்கி வைத்துக் கொண்டு பேப்பர்களில், ஷீட்களில் ப்ரிண்ட் எடுத்துக் கொள்ளலாம், இல்லையேல் மொத்த விலைக்கு கிலோவாக கூட தயாரிப்பவர்களிடம் வாங்கி கொள்ளலாம்.



நீங்கள் ஒரு 15,000 ரூபாய் மட்டும் முதலீடு செய்து ப்ரிண்டர் வாங்கி வைத்துக் கொண்டு, டம்மி நோட்களை பிரிண்ட் செய்து சந்தைப்படுத்தினால் அதில் முழு இலாபமும் உங்களுக்கானதாக இருக்கும், நீங்கள் மொத்த விலைக்கு கிலோ கணக்கில் வாங்கி பேக்கிங் செய்து விற்பனை செய்தால் அதில் ஒரு பகுதி இலாபம் நீங்கள் வாங்கியவருக்கு போய் சேரும். நோட்களில் For Kids என மென்சன் பண்ண வேண்டியது மிக மிக அவசியம்.

மற்றபடி இரண்டு முறையில் செய்தாலும் உங்களுக்கு இலாபத்தில் எல்லாம் குறைவு இருக்காது, நீங்கள் ஒரு கிலோ டம்மி நோட்ஸ்கள், வாங்கும் போது அதில் குறைந்த பட்சம் 300 டம்மி ரூபாய் நோட்டுகள் இருக்கும், 1 கிலோ டம்மி நோட்டுக்கான அசல் என்பது 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை இருக்கலாம், 5 டம்மி ரூபாய் நோட்டுகள் 10 ரூபாய்க்கு சந்தைகளில் விற்கப்படும், 

" அந்த வகையில் ஒரு கிலோவை வாங்கி ஐந்து ஐந்தாக பேக்கிங் செய்து விற்றால் கழிவுகள் எல்லாம் போக கிலோவிற்கு 400 ரூபாய் வரை இலாபம் இருக்கும், ஒரு நாளைக்கு ஒரு 2 கிலோ வரை சந்தைப்படுத்த முடிந்தால் மாதம் ரூ 20,000 க்கு குறையாமல் வருமானம் ஈட்டலாம் "


Business Ideas in Tamil Nadu
Small Business Ideas