• India
```

ஜிமிக்கி கடை...வெறும் 5000 முதலீடு செய்தால் போதும்...மாதம் ரூ 30000 வரை வருமானம் பார்க்கலாம்...!

Jimikki Kammal Shop Ideas

By Ramesh

Published on:  2025-02-15 17:09:41  |    121

Jimikki Kammal Shop - ஜிமிக்கி கடை வைத்து ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் எப்படி பார்க்கலாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கம்மல் கலாச்சாரத்தில் தற்போது ஜிமிக்கி என்பது பெண்களால் மிகவும் விரும்பப்பட்டு வருகிறது, அதுவும் சேலைக்கு ஏற்ப, டிரஸ்களுக்கு ஏற்ப ஜிமிக்கி போடுவது என்பது பேஷன் ஆகி வருகிறது, சாதாரணமாகவே ஒரே ஒருவர் மட்டுமே 25 க்கும் மேற்பட்ட ஜிமிக்கி கலெக்சன் வைத்து இருக்கிறார், அந்த வகையில் ஜிமிக்கிக்கான மார்க்கெட் என்பது நன்றாகவே இருக்கிறது.

சரி இந்த ஜிமிக்கியை எங்கு விற்கலாம் எப்படி விற்பது என்றால், ஒரு சிறிய ஸ்டீல் ஸ்டாண்ட் போன்ற அமைப்பு, அதில் கம்மலை தொங்க விடும் அளவிற்கு, ஒரு ப்ளைவுட்டில் குட்டி குட்டி ஆணிகள் அடித்து மாட்டி, மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் அருகில், கல்லூரி அருகில் பார்வைக்கு வைத்து, உட்கார்ந்தால் போதும், ஒரு நாள் ஒன்றுக்கு 20 முதல் 30 ஜிமிக்கிகளாவது விற்று விடலாம்.



சரி இந்த ஜிமிக்கிகளை எங்கு கொள்முதல் செய்வது என்றால் மொத்த விலை கடைகளில் அல்லது பேன்ஸிகளை மொத்தமாக விற்பதற்கு என்று ஒரு சில நார்த் இந்தியன் ஏஜென்சிகள் இருக்கும், அதன் மூலமாக கொள்முதல் செய்யலாம், ஒரு ஜிமிக்கு என்பது ரூ 20 முதல் 25 வரை தான் விலை ஆகும், நீங்கள் அதை சந்தையில் 50 ரூபாய் வரையில் விற்க முடியும்.

ஒரு ஜிமிக்கி 50 ரூபாய்க்கு விற்றால் கூட அதில் பாதிக்கு பாதி இலாபம் இருக்கும், அந்த வகையில் நாள் ஒன்றுக்கு ஒரு 20 முதல் 30 ஜிமிக்கிகள் விற்றால் கூட ரூ 1000 முதல் 1500 வரை வருமானம் பார்க்க முடியும், மாதத்திற்கு என்று பார்க்கும் போது சராசரியாக 30,000 ரூபாய் வரை வருமானம் பார்க்க முடியும், விழா காலங்களில் விற்பனை அதிகம் இருக்கும், இலாபமும் அதற்கேற்ப இருக்கும்.

Business Ideas in Tamil Nadu
Small Business Ideas