Share Market Frauds In India - வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் முதியவர்களை குறி வைத்து இந்தியாவில் பங்குச்சந்தை மோசடி ஒன்று நடைபெற்று வருகிறது அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Share Market Frauds In India - பங்குச்சந்தை என்பது ஒரு மிகப்பெரிய வர்த்தக மையமாக விளங்கி வருகிறது, நாள் ஒன்றுக்கு மட்டும் இலட்சம் கோடிகளுக்கு மேல் பண பரிமாற்றமும் புழக்கமும் நடைபெற்று வருகிறது, இதனால் பங்குச்சந்தை சம்மந்தமாக ஒன்றுமே தெரியாமல் கூட ஒரு சிலர் அதில் முதலீடு செய்ய ஆசைப்படுகின்றனர், அந்த ஆசையை ஒரு சிலர் பயன்படுத்திக் கொண்டு அதன் மூலம் மோசடி செய்ய விளைகின்றனர்,
ஒன்றுமே தெரியாமல் அவர்களாக முதலீடு செய்து பணத்தை இழந்தாலும் பரவாயில்லை, ஆனால் ஒரு சில இடைத்தரகர்கள் மூலம் ஒரு சிலர் இலாப நோக்கத்தில் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய நினைக்கின்றனர், அந்த இலாப நோக்கத்தில் இடைத்தரகர்களை அணுகும் செயல்முறை தான் ஒரு மிகப்பெரிய மோசடிக்கு வழி வகுக்கிறது, இந்தியாவில் தற்போது இந்த பங்குச்சந்தை மோசடி மிகப்பெரிய அளவில் பெருகி இருக்கிறது.
அதாவது வாட்சப் மற்றும் டெலிகிராம் குரூப்களில் பங்குச்சந்தை முதலீடுகள் மூலம் 5 மடங்கு முதல் 50 மடங்கு வரை ரிட்டன்ஸ் தருவதாக கூறி முதலில் விளம்பரப்படுத்துகின்றனர், பெரும்பாலும் இளைஞர்கள் இதில் ஏமாறுவது கடினம் என்பதால் முதியோர்களை குறிவைத்து இந்த விளம்பரம் செய்யப்படுகிறது, இதில் ஏமாறுகின்ற பலரும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களாக இருக்கின்றனர்.
தாங்கள் பல வருடங்களாக சம்பாதித்து சேமித்து வைத்த பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாக நினைத்து அந்த இடைத்தரகர்களுக்கு மொத்தமாக அனுப்பி விடுகின்றனர், அவர்களோ ஒட்டு மொத்தமாக பணத்தை அபேஸ் செய்து விட்டு, பணத்தை பங்குச்சந்தையில் இழந்து விட்டதாக கூறி இன்னும் முதலீடு செய்தால் எப்படியும் முந்தைய அசலையும் சேர்த்து பன்மடங்கு கிடைக்கும் என இன்னும் ஏமாற்ற விளைகின்றனர்.
" இவ்வாறாக ஒரே ஒரு வாட்சப் குரூப்பில் மட்டும் 4 கோடிக்கு மேல் மோசடி நடந்து இருப்பதாக தகவல், பங்குச்சந்தை முதலீட்டை பொறுத்தவரை எந்த இடைத்தரகர்களையும் நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என சைபர்கிரைம் போலீசார்கள் அறிக்கை விடுத்து இருக்கின்றனர் "