Koyambedu Flower Sale Becomes Slump - சென்னையில் கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும் மழையால் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூ விற்பனை வெகுவாக மந்தம் ஆகி இருக்கிறது.
Koyambedu Flower Sale Becomes Slump - சென்னையில் பெய்து வரும் மழை சென்னைவாசிகளையும் மட்டும் பாதிப்பது அல்ல, சென்னையை நம்பி இருக்கும் தமிழகத்தின் பல மாவட்டங்களின் பொருளாதாரங்களையும் அது முடக்குகிறது. பொதுவாக சென்னையில் விற்கப்படும் பூக்களில் 50 சதவிகிதம் திருவள்ளூரில் இருந்து தான் இறக்கப்படுகிறது, மீதி தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு லாரிகள் மூலம் வருகிறது.
நாள் ஒன்றுக்கு 450 டன்னுக்கு மேலும் கோயம்பேடு பூ சந்தைகளில் பூ இறக்குமதி ஆகுமாம், அதுவே விழாக்காலங்கள் என்றால் அது 600 டன் ஆகுமாம், ஆனால் தற்போது சென்னையில் பெய்து வரும் அதீத மழையால் அந்த 450 டன் என்பது 120 டன் ஆகி இருக்கிறது. அந்த 120 டன் பூக்களிலும் கூட 10 சதவிகிதத்தை கூட விற்க முடியாமல் பூ வியாபாரிகள் திணறி வருகின்றனர்.
கோயம்பேடு என்பது சென்னையின் மைய மார்க்கெட் என்பதால் பெரும்பாலும் சென்னைவாசிகள் காய்கறியோ, பூவோ மொத்த விலைக்கும், சில்லறை விலைக்கும் இங்கு தான் வாங்கி கொண்டு செல்வார்கள், ஆனால் தற்போது கோயம்பேட்டை சுற்றி இருக்கும் பல சாலைகள் தண்ணீரில் மூழ்கி இருப்பதால் நுகர்வோர்கள் கோயம்பேட்டிற்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு இருக்கிறது.
" மழை கொஞ்சம் கொஞ்சமாக நின்று வருவதால் ராட்சத குழாய்கள் மூலம் தேங்கி இருக்கும் நீர் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது, சாலைகளில் தேங்கி கிடக்கும் நீர் முதலில் க்ளியர் ஆகும் பட்சத்தில் கோயம்பேடு மார்க்கெட் பழைய நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது, டன் கணக்கில் வேஸ்ட் ஆகும் பூக்களை ஏதும் செய்ய முடியாது என்றாலும், வருகின்ற விழாக்காலங்கள் மீண்டும் கோயம்பேடு பூ மார்க்கெட்டிற்கு புத்துணர்வை தரும் என நம்புவோம் "