Gold Rate Today Tamil - இன்றைய ஆபரண மார்க்கெட் நிலவரத்தின்படி, தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு 40 ரூபாய் வீதம் குறைந்து இருக்கிறது.
நேற்றைய தினம் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஆபரண மார்க்கெட்டுகளில் கிராமிற்கு, ரூபாய் 7,030 என்று இருந்த நிலையில், இன்று கிராமுக்கு 5 ரூபாய் வீதம் குறைந்து 7,025 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் 18 காரட் தங்கம் ரூபாய் 5,748/ கிராம் எனவும், 24 காரட் தூய தங்கம் ரூபாய் 7,664/ கிராம் எனவும் விற்கப்படுகிறது.
சர்வதேச அளவில் நிகழும் அசாதாரண சூழல்கள், உலகளாவிய அளவில் நீடிக்கும் பொருளாதார மந்தம், தங்கத்தின் விலை குறைந்த போது தங்க விற்பனையாளர்கள் வாங்கி குவித்த தங்கத்தின் அளவு மற்றும் தற்போதைய சூழலில் மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் இருக்கும் அதிகப்படியான தங்கத்தின் டிமாண்ட் ஆகிய காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருக்கிறது.
வெள்ளி நேற்றைய தினம் கிராமிற்கு ரூபாய் 100 என இருந்த நிலையில், இன்று விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல், அதே விலைக்கு விற்கப்படுகிறது. 1 கிலோ வெள்ளி, ரூபாய் 10,000 என்ற விலையில் ஆபரண மார்க்கெட்டுகளில் விற்கப்படுகிறது
“ ஏறும் போது மின்னல் வேகத்தில் ஏறி விட்டு தற்போது பெரிய வீழ்ச்சி ஏதும் இல்லாமல் மெல்ல மெல்ல ஆமை வேகத்தில் சரிந்து கொண்டு இருக்கும் தங்கத்தின் விலையை கண்டு வாடிக்கையாளர்கள் சோகத்தில் ஆழ்ந்து இருக்கின்றனர் “