Toll TAX Booth - சுங்கக்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு அரசியல் தலைவர்கள், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.
Toll TAX Booth- பொதுமக்களின் மீது சுமத்தப்படும் பெரும் சுமை என்பதை உணர்ந்து, செப்.1 முதல் நடைமுறைக்கு வரவுள்ள சுங்கக்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு அரசியல் தலைவர்கள், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை பற்றி தெளிவாக பார்கலாம்,
பாமக தலைவர் அன்புமணி: தமிழகத்தில் 62 தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் 34 சுங்கச் சாவடிகளில் கட்டணம் கடந்த ஜூன் மாதம் உயர்த்தப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது மீதமுள்ள 28 சுங்கச் சாவடிகளில் செப்டம்பர்.1 முதல் கட்டணங்கள் அதிகரிக்க உள்ளது. இந்த உயர்வு கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது மிக அதிகமாக இருப்பதாக அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: 36 சுங்கச் சாவடிகளில் கட்டணம் கடந்த ஜூன் மாதம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது 25 சுங்கச் சாவடிகளில் கூடுதல் கட்டணம் விதிக்கப்பட உள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் என்பதால், இந்த கட்டண உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா: தமிழகத்தின் 25 சுங்கச் சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் சுங்கக் கட்டணம் 5% முதல் 12% வரை உயர்த்தப்பட உள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும், மற்றும் நுகர்வோர்கள் பாதிக்கப்படுவர்.இது பொதுமக்களின் மீது சுமத்தப்படும் பெரும் சுமை என்பதை மத்திய அரசு கவனத்தில் கொண்டு சுங்கக் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2