• India
```

தமிழக அரசின் இலவச வீட்டுக்கான திட்டத்திற்கு...எப்படி பதிவு செய்வது...?

Tamil Nadu Free House Scheme

By Ramesh

Published on:  2024-12-04 22:25:12  |    849

Tamil Nadu Free House Scheme - தமிழக அரசு வழங்கும் இலவச வீட்டிற்கான திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Tamil Nadu Free House Scheme - வீடுகள் இல்லா ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வீடு கட்டிக் கொடுக்கும் அரசின் திட்டம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். பொதுவாக இத்திட்டத்தின் மூலம் வீடுகள் இல்லா ஏழை எளிய மக்கள் ஒன்று வீடுகளை பெறலாம் அல்லது உங்களிடம் நிலம் மட்டும் இருக்கும் பட்சத்தில் வீடு கட்டுவதற்காக நான்கு இலட்சம் வரையிலான அரசின் மானியத்தை பெறலாம்.

சரி இத்திட்டத்திற்கு யார் யார் தகுதியானவர்கள் என்றால், முதலில் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியம் அல்லது கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் என எதில் ஆவது நீங்கள் பதிவு செய்து இருக்க வேண்டும், பதிவு செய்து மூன்று வருடம் நிறைவு ஆகி இருக்க வேண்டும், ஒரு முறையாவது நலவாரிய புத்தகத்தை புதிப்பித்தல் செய்து இருக்க வேண்டும், ஆண்டு வருமானம் 3 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.



உங்களது பெயரில் அல்லது உங்களது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் வேறு ஏதும் வீடுகள் இருக்க கூடாது, இவ்வாறான அனைத்து தகுதிகளும் இருக்கும் பட்சத்தில் நீங்கள் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்களாக அறியப்படுவீர்கள், உங்களுக்கு நிலம் ஏதும் இல்லை எனில் தமிழ்நாடு அரசு ஹவுசிங் போர்டுகள் மூலம் கட்டப்படும் பிளாட்களில் ஒரு வீடு ஒதுக்கப்படும்.

உங்களிடம் நிலம் இருக்கும் பட்சத்தில், (குறைந்த பட்சம் 300 சதுர அடி) வீடு கட்டுவதற்கு அரசு சார்பில் 4 இலட்சம் வரை மானிய உதவி வழங்கப்படும், முதலில் நீங்களாக இத்திட்டத்தில் விண்ணபிக்க இருக்கிறீர்கள் என்றால் https://tnuwwb.tn.gov.in/users/login என்ற தளத்தில் சென்று கேட்கும் ஆவணங்களை கொடுத்து பதிவு செய்யலாம், E-Seva மூலமாகவும் இத்திட்டத்திற்கு பதிவு செய்யலாம்.

" வருடத்திற்கு இத்திட்டத்தின் மூலம் 10,000 வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன, நீங்களாக கட்டும் வீடுகளுக்கு ஒரு குறிப்பிட்ட தவணை முறையில், அதாவது நீங்கள் வீடு கட்ட கட்ட மேற்பார்வை இட்டு அதற்கேற்ப பணம் வங்கியில் வரவு வைக்கப்படுகிறது " 

Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola