• India
```

பிரின்டர்ல பிரின்ட் எடுக்கும் போது...கோடு கோடா விழுதா...அப்படின்னா இத பண்ணுங்க...!

Printer White Line Problem Fix

By Ramesh

Published on:  2025-01-30 22:50:46  |    54

Printer White Line Problem Fix - உங்களோட பிரின்டர்ல பிரின்ட் எடுக்கும் போது பிரின்ட் காபில கோடு கோடா விழுந்துச்சின்னா இந்த தொகுப்ப முழுசா படிங்க சரி பண்ணிடலாம்.

Printer White Line Problem Fix - பிரின்டர் ஒரு சில வீட்லயோ அலுவலகத்துலயோ இல்ல ஏதாவது கடைலயோ பயன்படுத்திட்டு வருவாங்க, ஒரு சிலர் தினமும் பயன்படுத்துவாங்க, ஒரு சிலர் எப்பவாவது தான் பயன்படுத்துவாங்க, ஒரு சிலர் மாசக் கணக்குல பயன்படுத்தாம விட்டுட்டு என்னிக்காவது ஒரு நால் ஒரு பிரின்ட் எடுத்து பாப்போமேன்னு எடுத்து பாப்பாங்க, அந்த சமயத்துல எடுத்த பிரின்ட்ல கோடு கோடா விழும்.

ஒரு சிலர் பிரின்டர கலட்டி தூசியெல்லாம் தட்டுவாங்க, ஒரு சிலர் புது இங்க் மாத்தி பாப்பாங்க, ஒரு சிலர் ரிப்பேர்னு நினைச்சு நேரடியா கார்பரேட் ஆபிஸ்க்கு கால் பண்ணி வர சொல்லி அவங்களும் லென்ஸ் சரி இல்ல, அது சரி இல்ல, எடுத்துட்டு போய் தான் ரிப்பேர் பாக்கனும்னு ஏதாவது ஒரு கதைய சொல்லி 1000 ரூபாய் வர நிச்சயமா புடுங்கிருவாங்க.



இனிமே அப்படி உங்களுக்கு வந்திச்சினா, இந்த ஸ்டெப்ப பாலோ பண்ணுங்க,

1) முதல்ல உங்க பிரின்டர லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரோட கனெக்ட் பண்ணிக்கோங்க,

2) ஏதாவது PDF அல்லது Docs இருந்துச்சின்னா அத Open பண்ணிட்டு Ctrl + P அல்லது பிரின்ட் ஆப்சன க்ளிக் பண்ணுங்க,

3) அப்புறம் ஒரு டையலாக் பாக்ஸ் ஓபன் ஆகும், அதுல Properties அப்படிங்கிற ஆப்சன க்ளிக் பண்ணுங்க,

4) அப்புறம் இன்னொரு டையலாக் பாக்ஸ் ஓபன் ஆகும், அதுல Maintenance அப்படிங்கிற ஆப்சன க்ளிக் பண்ணுங்க,

5) முதல்ல Print Head Cleaning அப்படிங்கிற ஆப்சன க்ளிக் பண்ணி Head Cleaning பண்ணுங்க, அதுவே ஆட்டோமேட்டிக்கா 2-3 நிமிடங்கள் பிரின்டர் ரன் ஆகும்,

6) அப்புற அதே Maintenance ஆப்சன்ல Print Head Nozzle Check அப்படின்னு ஒரு ஆப்சன் இருக்கும் அத க்ளிக் பண்ணி ஒரு பேப்பர் வச்சி பாருங்க, அதுவே கலர்ஸ் எல்லாம் கோடு பண்ணி காமிக்கும்,

7) அப்பவும் கோடு விட்டு விட்டோ, இல்ல கோடு அழிஞ்சோ தெரிஞ்சிதுன்னா, அதே Maintenance ஆப்சன்ல Power Cleaning அப்படின்னு ஒரு ஆப்சன் இருக்கும் அத க்ளிக் பண்ணி ஓட விட்டா பிரின்டர் ஒரு 15 நிமிடம் க்ளீன் பண்ணும், (கண்டிப்பா மை பாதி அளவாச்சு பவர் க்ளீனிங் பண்ணும் போது இருக்கனும்)

8) அப்புறம் உங்களுக்கு தேவையானத ப்ரின்ட் பண்ணி பாருங்க, கோடு விழாது, ப்ரின்ட்டும் தெளிவா விழும்.

Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola